வரலக்ஷ்மி விரதம் - முஹுர்தம் மற்றும் பூஜை முறை

வரம் தரும் மஹாலக்ஷ்மி நம் எல்லோருக்கும் வரலட்சுமி ஆவாள். வரலக்ஷ்மி வ்ரத பூஜை இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி (ஆடி மாதம் / ஸ்ரவண மாதம்) கடைப்பிடிக்கப்படும். இந்த வ்ரதபூஜை ஆந்திரா, தெலுங்கானா, தமிழ் நாடு, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் பின்பற்றப்படுகிறது. ஆவணி பௌர்ணமி முன் வரும் சுக்ல பக்ஷ வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். 

முஹுர்தம்



  • ஸிம்ஹ லக்ன பூஜா முஹுர்தம் = காலை 06:17 முதல் 08:20 வரை
  • விருச்சிக லக்ன பூஜா முஹுர்தம் = மத்யானம் 12:28 முதல் 14:40 வரை 
  • கும்ப லக்ன பூஜா முஹுர்தம் = வரலக்ஷ்மி விரதம்
  • வ்ருஷப லக்ன பூஜா முஹுர்தம் = ராத்ரி 23:50 முதல் 25:52+ வரை 

வரலக்ஷ்மி விரதம்


வரலட்சுமி விரதம் கல்யாணம் ஆன பெண்மணிகள், சுமங்கலிகள் மேற்கொள்ளுவார்கள். இவர்கள் தமது குடும்ப நலனுக்காக மகாலட்சுமியிடம் வரம் கேட்டு, விரதம் இருந்து பூஜை செய்வார்கள். அஷ்ட ஐஸ்வர்யங்களை வரமாக கொடுக்கும் தேவியே வரலக்ஷ்மியாக கருதப்படுகிறாள். அன்பு, செல்வம், சக்தி, சாந்தி, நிலம், புகழ், இன்பம், ஞானம் போன்றவைகள் தான் நமது வாழ்க்கையில் அஷ்ட ஐஸ்வர்யங்களாக இருந்து ஆசீர்வாதம் தருகின்றன. 

இந்த விரதத்தின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. ஈஸ்வரனும் ஈஸ்வரியும் விளையாட, அவர்கள் நடுவில் யார் ஜெயித்தவர் என்ற போட்டி எழ, சித்ரநேமி என்கிற கணன் சிவனுக்கு வெற்றி அறிவிக்க, பார்வதி தேவியால் அந்த கணன் சபிக்கப்பட்டான். சிவனின் கோரிக்கைக்கு செவிகொடுத்து ஈஸ்வரி தன் சாபத்தை மாற்றினாள். அதன்படி, சித்ரநேமி பக்தி சிரத்தையுடன் வரலட்சுமி வ்ரதம் அனுசரிக்கப்படும் பொழுது அதில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து, சாப விமோசனம் பெற்றான். 

மற்றொரு கதை சாருமதியின் பக்தி, சிரத்தையுடன் கூடிய மஹா லட்சுமி பூஜையை பற்றி விளக்குகிறது. சாருமதி தன் கணவன், குழந்தைகள் மற்றும் எல்லா குடும்பத்தினர் நலனுக்கு செய்யும் பிரார்த்தனையினால் பிரசன்னமடைந்த மஹா லட்சுமி, சாருமதியின் கனவில் வந்து வரலக்ஷ்மி பூஜை செய்து அதிக வரம் பெற வழி கூறினாள். அதன்படி சாருமதி வரலக்ஷ்மி பூஜை செய்து மற்றவர்களையும் ஊக்குவித்தாள். சாருமதி நகரில் இருக்கும் எல்லோரும் வரலக்ஷ்மி விரதம் மேற்கொண்டு, பூஜை செய்து, தேவியின் ஆசீர்வாதம் பெற்றனர்.

வரலக்ஷ்மி பூஜை விதிகளில் உள்ள விஷேஷம் என்ன வென்றால், உலோகத்தினால் ஆன கலசம் மஹா லட்சுமியாக அலங்கரிக்கப்படும். இந்த கலசத்தில் பச்சை அரிசி, மஞ்சள், ஏலக்காய், லவங்கம், துளசி, பாக்கு போன்றவைகள் நிரப்பி, இந்த கலசத்தை மாவிலையால் கட்டி,இதன் மேல் மஞ்சள் பூசப்பட்ட அம்மன் முகம் குங்குமத்தோடு ஜ்வலிக்கும். இந்த அம்மனுக்கு பட்டு புத்தாடை உடுத்தி, ஆபரணங்கள், ஆபூஷணங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்காரம் செய்து பூஜையில் வரலக்ஷ்மி ரூபத்தில் ஸ்தாபனம் செய்வார்கள். தேவிக்கு தாம்பூலம் சமர்ப்பித்து, உபசார பூஜை செய்து, நைவேத்தியம் அர்ப்பணித்து ஸ்தோத்திரம் பாடி குடும்ப ஸ்திரீகள் மகிழ்வார்கள். 

நைவேத்தியத்தில் பல வகையராக்கள் படைக்கப்படும். இவை பக்ஷண வர்க்கங்கள், பழங்கள், மற்றும் சுவையாகவும் ருசியாகவும் தயாரிக்க பட்ட பண்டங்கள் ஆகும்:

  • சக்கரை பொங்கல், பாயசம், பஞ்ச அம்ருதம், வெண் பொங்கல்.
  • வடை, அப்பம்
  • சுண்டல் 
  • தேங்காய், வாழைப்பழம், மாதுளம் பழம் மற்றும் பல பழ வகையாக்கள்
  • உலர்ந்த பழங்கள் 

மேல்கூறியவை யாவும் தோரணம், கோலம், புஷ்பங்கள் போன்றவையால் அலங்கரிக்க பட்ட பூஜா பீடத்தில், விளக்கு பூஜை, கண்டா பூஜை மற்றும் ஸ்லோகங்கள், அர்ச்சனைகளால் ஆராதனை செய்யப்பட்ட தேவிக்கு அற்பிக்கப்படும். லட்சுமி சஹஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், மஹா லட்சுமி அஷ்டகம், மஹாலக்ஷ்மி கவசம் மற்றும் மந்திரங்கள் ஜபித்து சந்த்யா காலத்தில் ஆரத்தி எடுப்பார்கள். வரலக்ஷ்மியிடம் குடும்ப நலன், செல்வம், ஆரோக்கியம், அறிவு, நிம்மதி வரமாக வேண்டி ஆசீர்வாதம் பெறுவார்கள். விரதம் வைத்த குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் விருந்தினர்கள் பிரசாதத்தை உண்டு களித்து தேவியின் அருள் பெறுவார்கள். மறுநாள் புனர்பூஜை செய்து கலசத்தை நகற்றி வைத்து வரலக்ஷ்மி பூஜையை நிறைவு செய்வார்கள். 

நீங்களும் வரலக்ஷ்மி பூஜை செய்து தேவி அருள் பெற்று வாழ்க்கையில் வளம் காணுங்கள். 

வரலக்ஷ்மி விரதம் பலன்களை அதிகரிக்க மஹாலக்ஷ்மி பூஜையில் ஸ்ரீ யந்திரம், மஹா லட்சுமி யந்திரம், பாதரசம் ஸ்ரீ யந்திரம் மற்றும் தாமரை விதைகளால் கோர்க்கப்பட்ட ஜெபமாலை உபயோகிக்கவும். இந்த பொருள்களை நீங்கள் ஆஸ்ட்ரோசேஜ் தளத்தில் சென்று, கட்டணம் கட்டி, ஆர்டர் செய்யலாம். 

உங்களுக்கு வரலக்ஷ்மி விரதம் நல் வாழ்த்துக்கள்.

Related Articles:

No comments:

Post a Comment