ஸ்ரீ ஜெயந்தி சலுகை: 40 சதவீதம் வரை தள்ளுபடி ரத்தினம், ருத்ராக்ஷம், யந்திரம், இவைகளில்

இந்த சலுகை 26 ஆகஸ்ட் 2016 வரை. இதில் உங்களுக்கு ஆஸ்ட்ரோசேஜ் பொருள்களில் 40 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் இங்கு நல்ல தரமான ரத்தினம், ருத்ராக்ஷம், மூலிகை, யந்திரம் போன்றவைகளை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Janmashtamiyin 40% varai tallupadi AstroSagil mattume

Read More »

வரலக்ஷ்மி விரதம் - முஹுர்தம் மற்றும் பூஜை முறை

வரம் தரும் மஹாலக்ஷ்மி நம் எல்லோருக்கும் வரலட்சுமி ஆவாள். வரலக்ஷ்மி வ்ரத பூஜை இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி (ஆடி மாதம் / ஸ்ரவண மாதம்) கடைப்பிடிக்கப்படும். இந்த வ்ரதபூஜை ஆந்திரா, தெலுங்கானா, தமிழ் நாடு, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் பின்பற்றப்படுகிறது. ஆவணி பௌர்ணமி முன் வரும் சுக்ல பக்ஷ வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். 

முஹுர்தம் • ஸிம்ஹ லக்ன பூஜா முஹுர்தம் = காலை 06:17 முதல் 08:20 வரை
 • விருச்சிக லக்ன பூஜா முஹுர்தம் = மத்யானம் 12:28 முதல் 14:40 வரை 
 • கும்ப லக்ன பூஜா முஹுர்தம் = வரலக்ஷ்மி விரதம்
 • வ்ருஷப லக்ன பூஜா முஹுர்தம் = ராத்ரி 23:50 முதல் 25:52+ வரை 

வரலக்ஷ்மி விரதம்


வரலட்சுமி விரதம் கல்யாணம் ஆன பெண்மணிகள், சுமங்கலிகள் மேற்கொள்ளுவார்கள். இவர்கள் தமது குடும்ப நலனுக்காக மகாலட்சுமியிடம் வரம் கேட்டு, விரதம் இருந்து பூஜை செய்வார்கள். அஷ்ட ஐஸ்வர்யங்களை வரமாக கொடுக்கும் தேவியே வரலக்ஷ்மியாக கருதப்படுகிறாள். அன்பு, செல்வம், சக்தி, சாந்தி, நிலம், புகழ், இன்பம், ஞானம் போன்றவைகள் தான் நமது வாழ்க்கையில் அஷ்ட ஐஸ்வர்யங்களாக இருந்து ஆசீர்வாதம் தருகின்றன. 

இந்த விரதத்தின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. ஈஸ்வரனும் ஈஸ்வரியும் விளையாட, அவர்கள் நடுவில் யார் ஜெயித்தவர் என்ற போட்டி எழ, சித்ரநேமி என்கிற கணன் சிவனுக்கு வெற்றி அறிவிக்க, பார்வதி தேவியால் அந்த கணன் சபிக்கப்பட்டான். சிவனின் கோரிக்கைக்கு செவிகொடுத்து ஈஸ்வரி தன் சாபத்தை மாற்றினாள். அதன்படி, சித்ரநேமி பக்தி சிரத்தையுடன் வரலட்சுமி வ்ரதம் அனுசரிக்கப்படும் பொழுது அதில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து, சாப விமோசனம் பெற்றான். 

மற்றொரு கதை சாருமதியின் பக்தி, சிரத்தையுடன் கூடிய மஹா லட்சுமி பூஜையை பற்றி விளக்குகிறது. சாருமதி தன் கணவன், குழந்தைகள் மற்றும் எல்லா குடும்பத்தினர் நலனுக்கு செய்யும் பிரார்த்தனையினால் பிரசன்னமடைந்த மஹா லட்சுமி, சாருமதியின் கனவில் வந்து வரலக்ஷ்மி பூஜை செய்து அதிக வரம் பெற வழி கூறினாள். அதன்படி சாருமதி வரலக்ஷ்மி பூஜை செய்து மற்றவர்களையும் ஊக்குவித்தாள். சாருமதி நகரில் இருக்கும் எல்லோரும் வரலக்ஷ்மி விரதம் மேற்கொண்டு, பூஜை செய்து, தேவியின் ஆசீர்வாதம் பெற்றனர்.

வரலக்ஷ்மி பூஜை விதிகளில் உள்ள விஷேஷம் என்ன வென்றால், உலோகத்தினால் ஆன கலசம் மஹா லட்சுமியாக அலங்கரிக்கப்படும். இந்த கலசத்தில் பச்சை அரிசி, மஞ்சள், ஏலக்காய், லவங்கம், துளசி, பாக்கு போன்றவைகள் நிரப்பி, இந்த கலசத்தை மாவிலையால் கட்டி,இதன் மேல் மஞ்சள் பூசப்பட்ட அம்மன் முகம் குங்குமத்தோடு ஜ்வலிக்கும். இந்த அம்மனுக்கு பட்டு புத்தாடை உடுத்தி, ஆபரணங்கள், ஆபூஷணங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்காரம் செய்து பூஜையில் வரலக்ஷ்மி ரூபத்தில் ஸ்தாபனம் செய்வார்கள். தேவிக்கு தாம்பூலம் சமர்ப்பித்து, உபசார பூஜை செய்து, நைவேத்தியம் அர்ப்பணித்து ஸ்தோத்திரம் பாடி குடும்ப ஸ்திரீகள் மகிழ்வார்கள். 

நைவேத்தியத்தில் பல வகையராக்கள் படைக்கப்படும். இவை பக்ஷண வர்க்கங்கள், பழங்கள், மற்றும் சுவையாகவும் ருசியாகவும் தயாரிக்க பட்ட பண்டங்கள் ஆகும்:

 • சக்கரை பொங்கல், பாயசம், பஞ்ச அம்ருதம், வெண் பொங்கல்.
 • வடை, அப்பம்
 • சுண்டல் 
 • தேங்காய், வாழைப்பழம், மாதுளம் பழம் மற்றும் பல பழ வகையாக்கள்
 • உலர்ந்த பழங்கள் 

மேல்கூறியவை யாவும் தோரணம், கோலம், புஷ்பங்கள் போன்றவையால் அலங்கரிக்க பட்ட பூஜா பீடத்தில், விளக்கு பூஜை, கண்டா பூஜை மற்றும் ஸ்லோகங்கள், அர்ச்சனைகளால் ஆராதனை செய்யப்பட்ட தேவிக்கு அற்பிக்கப்படும். லட்சுமி சஹஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், மஹா லட்சுமி அஷ்டகம், மஹாலக்ஷ்மி கவசம் மற்றும் மந்திரங்கள் ஜபித்து சந்த்யா காலத்தில் ஆரத்தி எடுப்பார்கள். வரலக்ஷ்மியிடம் குடும்ப நலன், செல்வம், ஆரோக்கியம், அறிவு, நிம்மதி வரமாக வேண்டி ஆசீர்வாதம் பெறுவார்கள். விரதம் வைத்த குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் விருந்தினர்கள் பிரசாதத்தை உண்டு களித்து தேவியின் அருள் பெறுவார்கள். மறுநாள் புனர்பூஜை செய்து கலசத்தை நகற்றி வைத்து வரலக்ஷ்மி பூஜையை நிறைவு செய்வார்கள். 

நீங்களும் வரலக்ஷ்மி பூஜை செய்து தேவி அருள் பெற்று வாழ்க்கையில் வளம் காணுங்கள். 

வரலக்ஷ்மி விரதம் பலன்களை அதிகரிக்க மஹாலக்ஷ்மி பூஜையில் ஸ்ரீ யந்திரம், மஹா லட்சுமி யந்திரம், பாதரசம் ஸ்ரீ யந்திரம் மற்றும் தாமரை விதைகளால் கோர்க்கப்பட்ட ஜெபமாலை உபயோகிக்கவும். இந்த பொருள்களை நீங்கள் ஆஸ்ட்ரோசேஜ் தளத்தில் சென்று, கட்டணம் கட்டி, ஆர்டர் செய்யலாம். 

உங்களுக்கு வரலக்ஷ்மி விரதம் நல் வாழ்த்துக்கள்.
Read More »

நாக பஞ்சமி - சர்ப்ப தோஷ நிவர்த்தி செய்யலாம், வாருங்கள்!

நாக பஞ்சமி


ஆகஸ்ட் 7

முஹூர்த்தம்: 06:17:15 முதல் 08:51:57 வரை ஐ.எஸ்.டி.

உங்கள் நகரத்தின் முஹூர்த்தம் அறிவதற்கு, இங்கு க்ளிக் செய்யுங்கள்: நகர முஹூர்த்தம்

இந்த வருட நாக பஞ்சமி ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படும். இது வளர்பிறை / ஷுக்ல பக்ஷத்தில் கடைபிடிக்கப்படும். சிவ பக்தர்களும் சக்தியை வழிபடுகிறவர்களும் இதை கடைபிடிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். நாக பஞ்சமியை அனுஷ்டிப்பதால் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷத்திலிருந்து முக்தி கிடைக்கும். 

மஹாதேவர் நாக லோகத்தையும் ஆள்கிறவர். இவரை பூஜிப்பதால் நமக்கு நாகர்களின் சாபத்திருந்தும் தோஷத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும். கட்டாயம் தோஷத்தின் தாக்கம் குறையவே செய்யும். 

நமது இந்திய ஜோதிடத்தில் நாக தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப தோஷம் போன்ற சொற்கள் நிறைய வரும். இதன் அர்த்தம் என்னவென்றால், முற்காலம் அல்லது முந்திய ஜென்மத்தில் மனிதர்களினால் சர்பங்களுக்கு ஏதாவது கொடுமை அல்லது வேண்டாதவை நடந்திருக்குமானால், அதன் பிரதி பலன் இந்த ஜென்ம கர்மாவாக வந்து நமது ஜாதகத்தில் ஒரு தோஷத்தின் ரூபமாக வரும்.

சர்ப்ப தோஷம் நமது ஜாதகத்தில் எப்படி காணப்படும்? எல்லா கிரஹங்களும் ராஹு கேதுவிற்கு மத்தியில் இருக்குமானால் ஜோதிடர்கள் அந்த நிலையை கால சர்ப்ப தோஷம் என்று குறிப்பிடுவார்கள். 

ராஹுவும் கேதுவும் சர்பங்களாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு கோள்களுக்கு நடுவில் மற்ற கோள்களான சூர்யன், சந்திரன், செவ்வாய், புதன், ப்ருஹஸ்பதி, சுக்கிரன், மற்றும் சனி இருக்கும் பட்சத்தில் ஒரு கஷ்டமாந யோகம் உருவாகிறது. இதை கஷ்டம் என்று ஏன் சொல்கிறோம் என்றால், இதன் காரணமாக ஜாதகருக்கு நிறைய தொல்லைகளை சந்திக்க வேண்டி இருக்கும். யோகம் என்று ஏன் சொல்கிறோம் என்றால் இந்த கோள்களின் நிலை மற்றும் இந்த நிலை காரணமாக தோன்றும் கஷ்டங்கள் மற்றும் இந்த கஷ்டங்களுக்கு அப்பால் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நல்ல விஷயங்களை குறிப்பதற்காக யோகம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம். 

கால சர்ப்ப தோஷம் எந்த விதத்தில் மனிதர்களை பாதிக்கும்? 

 • படிப்பில் விக்னம் 
 • காரியத்தில் விக்னம் 
 • வேலை கிடைப்பதில் விக்னம் 
 • வேலையில் அதிருப்தி 
 • வேலை இழப்பு 
 • திருமணத்தில் விக்னம் 
 • மணவாழ்க்கையில் அதிருப்தி மற்றும் மணவாழ்க்கை தோல்வி அடைதல் 
 • விவாகரத்து அல்லது பிரிவினை 
 • குழந்தை பிறப்பதில் விக்னம் 
 • ஒரு காரியமும் நிறைவு அடையா பட்சத்தில் மன அதிருப்தி, நிம்மதி இழப்பு 

கிரஹங்களின் மற்ற நிலை முன்னிட்டு மேல் சொல்லப்பட்டவையின் தாக்கம் குறையவோ அல்லது மேலாகவோ இருக்கலாம். ஜோதிடர்களின் குறிப்பு என்ன வென்றால் 35 வயதிற்கப்புறம் இந்த தோஷத்தின் தாக்கம் முடிவு பெற்று நல்ல விஷயமும் சமாசாரமும் நடக்க ஆரம்பிக்கும். 

சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரமாகவும் ராஹு கேதுவிற்கு ப்ரீத்தி, சாந்தி செய்யவும் இந்த நாக பஞ்சமிக்கு மகத்துவம், முக்கியத்துவம் நமது மதத்தில், கலாசாரத்தில் கொடுக்க பட்டுள்ளது.

இந்த திதியில் பாம்பின் புற்றிற்கு பால் வார்ப்பார்கள். மஹா தேவருக்கு உபசார பூஜை, அர்ச்சனை, அபிஷேகம் போன்ற மரியாதைகள் ஆலயத்தில் நடைபெறும். சக்தியை பூஜிப்பவர்கள் ஆலயத்தில் அம்மனுக்கு வேண்டிய உபசார பூஜை, அபிஷேகம், அர்ச்சனை போன்ற மரியாதைகள் செய்து தேவியின் ஆசீர்வாதம், அருள் பெறுவார்கள். பாம்பின் புற்றில் பால் வார்க்கும் முறை சூர்ய அஸ்தம் முன் செய்து முடிக்க வேண்டும். 

நாக பஞ்சமி அன்று செய்யும் பூஜையும் பரிகாரமும் சர்ப்ப தோஷத்தின் தாக்கத்தை குறைக்கவும் நல்ல பலன்களை கொடுக்கவும் பெரிய அளவில் உதவி செய்கின்றன என்பதில் சந்தேகமில்லை. பலர் இந்த பரிகாரங்களினால் வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை சந்தித்து இருக்கிறார்கள். நீங்களும் நமது முன்னோர்கள் கற்று கொடுத்த சில நல்ல விதி முறைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நிறைவும் பெறலாம். 

நாக பஞ்சமியன்று கால சர்ப்ப யந்திரம், நவகிரஹ யந்திரம் போன்ற யந்திரங்களை ஸ்தாபித்து பூஜை செய்து அருள், வளம் பெறலாம். இது சர்ப்ப தோஷத்தின் தாக்கத்தை குறைக்கவும் உதவும். சிவ லிங்க பூஜை செய்தும் மஹாதேவரின் அருள் பெறலாம். ருத்திராக்ஷ மாலை அணிந்து ராகு கேதுவிற்கு பரிகாரம் செய்யலாம். 

ஆஸ்ட்ரோசேஜ் தளத்தில் உள்ள அங்காடியில் உங்களுக்கு வேண்டிய யந்திரங்களும், மாலைகளும், மற்ற பொருள்களும் கிடைக்கும். கால சர்ப்ப யந்திரம், மஹா ம்ருத்யுஞ்சய யந்திரம், பாதரசம் சிவ லிங்கம், ராஹு யந்திரம், கேது யந்திரம், எட்டு முகி ருத்ராக்ஷம், ஒன்பது முகி ருத்ராக்ஷம் இவற்றை உபயோகித்து இந்த தோஷ நிவர்த்தி செய்யுங்கள்.

லிங்கில் கிளிக் செய்து பயன் அடையுங்கள். 

மஹா தேவரிடம் சரண் அடையலாம், வாருங்கள்! 

நாக பஞ்சமியின் நல் வாழ்த்துக்கள்.

நன்றி. வணக்கம்.
Read More »

ஆகஸ்ட் 2016 மாத ராசி பலன்

ஆஸ்ட்ரோசேஜ் தரப்பிலிருந்து உங்களுக்கு ஆகஸ்ட் 2016 ராசி பலனை அளிக்கிறோம். ஆகஸ்ட் மாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர், நண்பர், மற்றும் பிரியமானவர்களுக்கும், சார்ந்தவர்களுக்கும் எப்படி இருக்கும் என்று படித்து பாருங்கள்.2 ஆகஸ்ட் 2016அமாவாசை
14 ஆகஸ்ட் 2016ஏகாதசி
18 ஆகஸ்ட் 2016பௌர்ணமி
28 ஆகஸ்ட் 2016ஏகாதசி

மேஷம் 


குரு பகவான் ஆறாவது வீட்டில் பெயர்ச்சி செய்கிறார். இந்த வருட குரு கோசாரம் நன்மை செய்யாது. அஷ்டம சனியில் பிடியில் இருக்கும் நீங்கள் இப்பொழுது வாழ்க்கையின் திருப்புமுனையில் இருக்கிறீர்கள். கொஞ்சம் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் கெடும். மன நிம்மதி இருக்காது. குழந்தைகள் பக்கத்திலிருந்து எதிர்ப்பு, டென்ஷன், கொள்கை வேறுபாடு இருக்கும். சமாளியுங்கள் எவரிடமும் தர்க்கம் வாக்கு வாதம் வேண்டாம். செய்யும் வேலையில் கவனத்தை திருப்புங்கள். இங்கு தான் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பதவி உயர்வு, பாராட்டு, பண வரவு சந்தோஷம் கொடுக்கும். பொறுப்புகள் ஜாஸ்தி ஆகும். கடன் வாங்காதீர்கள்; கொடுக்காதீர்கள். குடும்பத்தில் அதிருப்தி நிலவும். புது உறவுகளில் பார்த்து நடந்து கொள்ளவும். எதிரிகளின் கை ஓங்கும். கோவத்தை கட்டு படுத்துங்கள். உங்கள் அலைபாயும் மனதை படைப்பாற்றலில் செலுத்துங்கள். சாப்பாடு விஷயத்தில் கவனமாக இருங்கள். மருத்துவ செலவுகள் எதிர்பாராமல் வரலாம்.

பட்சிகளுக்கு தான்யம் போடுங்கள். குரு பகவானுக்கும் சனி பகவானுக்கும் ப்ரீதி பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். 

ரிஷபம் 


குரு பகவான் ஐந்தாவது இடத்தில் இந்த மாதம் பெயர்ச்சி செய்கிறார். மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். குழந்தைகளுக்காக நீங்கள் செய்து வந்த முயற்சிகள் இப்பொழுது வெற்றி பெரும். கடன் தொல்லையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். நாலாவது இடத்தில் ராஹுவும் புதனும் சேர்ந்து கோசாரம் செய்வதால், தவறான எண்ணம், தப்பான கருத்து, தப்பாக புரிந்து கொள்ளுதல், போன்ற விஷயங்களிருந்து ஜாக்கிரதையாக இருங்கள். மேல் அதிகாரிகள், சக பணியாளர்கள் இவர்களுடன் நீங்கள் கொஞ்சன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டி வரும். வாதம், விவாதம் இரண்டு விஷயத்திலும் கூடுதல் கவனமாக இருங்கள். டீம் மேனேஜ்மென்ட் ரொம்ப அவசியம். பூர்வீக சொத்து உங்கள் கை வரும். ஆனால் இன்வெஸ்ட்மென்ட் விஷயத்தில் இந்த சமயம் சரி இல்லை. குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்து கொள்ளுங்கள். எல்லோரிடமும் அன்பாக இருங்கள். கட்டாயம் சுகம் உண்டு. பண வரவு சீராக இருக்கும். ஷேர் மார்க்கெட்டில் வர வேண்டிய லாபம் வரும். 

ஏழு முகி ருத்ராக்ஷம் அணியுங்கள். ஆஞ்சநேயரை பூஜை செய்யுங்கள். சனி கிழமையில் அரச மரத்திற்கு எண்ணெய் விளக்கு ஏற்றுங்கள்.

மிதுனம் 


இந்த மாதம் காரியத்தில் கண்ணாக இருந்து செய்ய வேண்டிய கார்யங்களை முடிப்பீர்கள். வேலை சம்பந்தமாக பிரயாணம் செய்ய வேண்டி வரும். வருவாய் அதிகரிக்கும். எதிர்பாராத லாபம் வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வரவு செலவை பார்த்து சமாளியுங்கள். அதே சமயம், மேல் அதிகாரிகள், சக பணியாளர்கள் இவர்களிடம் படு கவனமாக டீல் பண்ணணும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்; பொறுப்புகளை நன்றாக மேனேஜ் செய்வீர்கள். வீடு ரேனோவேஷென், புதுபித்தல் போன்ற விஷயங்களில் ஆர்வம் இருக்கும். ஆனால் புதிய ப்ரோபெர்ட்டி சம்பந்தமாக தீர்மானம் / முடிவு இப்பொழுது எடுக்க வேண்டாம். தகப்பனாரின் ஆரோக்யத்தில் முக்கியத்துவம் கொடுங்கள். வரவு செலவின் மேல் ஒரு கண் வைப்பது நல்லது. 

ஏழு முகி ருத்ராக்ஷம் அணிவதன் மூலம் சனி ப்ரீதி செய்யலாம். 

கடகம் 


உடல் ஆரோகியத்தில் மிக அதிக கவனம் தேவை. மனதும் அலைபாயும். அனாவசியமான ஸ்டெரெஸ் அல்லது டென்ஷென் எடுத்துகொள்ளவேண்டாம். வேலை பார்க்கும் இடத்தில் படு உஷாராக இருக்கணும். செய்யும் பணியில் ஃபோகஸ் செய்து, முக்கிய வேலைகளை பொறுப்பாகவும் புத்தி சாதுர்யதுடனும் செய்து முடியுங்கள். தன் கையே தனக்குதவி என்பதை மனதில் வைத்துகொள்ளலாம்.வியாபாரிகளுக்கு நல்ல நேரம். நவீன நுட்பங்களை பிரயோகம் செய்து வியாபாரத்தை விரிவு படுத்தலாம். மாத பிற்பகுதியில் உங்கள் அலுவலகத்தில் உள்ள மேல் அதிகாரிகளிடம் உங்கள் உறவு முறையில் முன்னேற்றம் காண்பீர்கள்.குடும்ப நலனில் அக்கறை காட்டுங்கள். உறவுகளில் சம்பந்தங்களில் தகராரும் குடும்பத்தில் குழப்பமும் உங்கள் மனதில் சங்கடம் செய்யும்.சேமிப்பு திட்டங்கள் நல்ல பலனை கொடுக்கும். சிலர் வேலை மாற்றம் செய்வார்கள். வேறு சிலருக்கு செய்யும் வேலையில் புதிய பொறுப்புகள், அமைப்பில் மாற்றம் காணலாம். கடன் வாங்குவதில்,,கொடுப்பதில் ரொம்ப கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோகியத்தில், நலனில் அக்கறை காட்டுங்கள்.

குரு, ப்ரஹஸ்பதி யந்திரம் வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்யவும். எதிரி, கடன், வியாதி தொல்லைகளில் இருந்து முடிவு கிடைக்கும். பாக்கியம் பிரகாசிக்கும். 

சிம்ஹம் 


மாதத்தின் முற்பகுதியில் வேலை செய்யும் இடத்தில் சிக்கல்களும் ப்ரச்சனைகளும் கூடும். சிலருக்கு வேலை மாற்றம் செய்ய நல்ல தருணம். உங்களுடைய பொறுப்புகளும் அதிகாரமும் கூடவே வ்ருத்தி அடையும். மேலதிகாரிகளின், உடன் பணியாற்றுபவர்களின் மார்க்க தர்ஷனம், உதவி உங்களுக்கு நன்மை தரும். எல்லா விஷயத்திலும் உங்கள் மிகச்சிறந்த முயற்சிகளை நீங்கள் தர வேண்டி வரும்.சிலர் வெளிநாட்டு பிரயாணம் செய்வார்கள். உங்களுடைய செலவுகள் ஜாஸ்தி ஆகவும் ப்ளான் செய்த வேலைகள் தாமதமாகவும் இருக்கும். கவலை வேண்டாம். திறமையும், புத்தியும் உபயோகித்து வாழ்க்கையில் முன்னேறவும். மற்றவர்களை நம்புவது கொஞ்சம் கடினமாக இருக்கும். அதனால் நீங்கள் செய்யும் வேலை கொஞ்சம் தாமதமாக இருக்கும். உங்கள் கீழ் வேலை செய்யும் பணியாளர்களிடம் நீங்கள் மிகவும் அன்பாகவும் பணிவாகவும் இருக்கிறது நல்லது. உங்கள் குடும்பத்தில் இப்பொழுது நிலைமை சரி இல்லை. தாம்பத்திய உறவில் பொறுமை அவசியம். குழந்தைகள் ஆதரவு, இன்பம் தருவார்கள். புது உறவு நன்மை தரும், நீடிக்கும், மன நிறைவு கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மன ஆரோகியத்தில் தியானம் செலுத்தவும். கோவத்தை குறைக்கவும். தனிப்பட்ட உறவு முறையில், கார்ய க்ஷேத்ரத்தில் இருக்கும் உளைச்சல், அழுத்தம் காரணமாக உங்கள் நிம்மதியும் பேலேன்சும் கெடும். அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

ராஹு, சனி பரிகாரம் நிம்மதி அளிக்கும். பவழம் அணியலாம்.

கன்னி 


குரு உங்கள் ஜன்ம ராசியில் கோசாரம் செய்கிறார். ராஹு 12 வீட்டில் இருக்கிறார். டென்ஷேன் கொஞ்ச நாள் நீடிக்கும், ஆனால் குறைவாக இருக்கும். நிதானமாக இருங்கள். உங்களுக்கு வரவேண்டிய பாராட்டும் புகழும் வந்து சேரும். வியாபாரம் விரிவு அடையும். வேலை பளு அதிகம் ஆகும். பிரமோஷென் விஷயங்களுக்கு இது ஒரு நல்ல நேரம் வீடு,சொத்து விவஹாரத்திற்கு டைம் சரியாக உள்ளது. குழந்தைகள் தொந்தரவு கொஞ்சம் ஜாஸ்தி ஆகும், ஜாக்கிரதையாக கையாளவும். எல்லோரிடையும் அனுகூலமாக பழகவும், நிதானமாக இருக்கவும். உங்கள் குரலை இனிமையாகவும், பேசும் தோரணையை சுமுகமாகவும் ஆக்கவும். தாம்பத்திய உறவு சுமுகமாக இருக்கும். கலை, சங்கீதம் போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இத்தனை நாள் வாழ்கையை என்ஜாய் செய்தீர்களானால் இப்பொழுது கொஞ்சம் ஹார்ட் வொர்க் பண்ண வேண்டி வரும். குடிபழக்கம் போதை மருந்து, ஸ்மோகிங் போன்றவற்றிலிருந்து தூர இருங்கள்.

கௌரி சங்கர ருத்ராக்ஷம் சிவ லிங்கத்தில் ஸ்பர்ஷம் செய்து வடக்கு திசையை நோக்கி அணியலாம். 

துலா 


சனீஸ்வரன் இரண்டாம் வீட்டிலும் குரு பகவான் பன்னிரண்டிலும் சஞ்சரிப்பதால், மன உளைச்சல் ஜாஸ்தியாகவும் மன நிம்மதி குறையவும் செய்யும். எதிரிகளின் கை ஓங்கும். உங்கள் வேலையில் கவனமாக இருந்து விஷயத்தை நிதானமாக ஆராயுங்கள். ஸ்ட்ரெஸ் எடுத்துகொள்வதினால் அனாவசியமாக உங்கள் ஆரோக்கியம் தான் கெடும். உடல் மன ஆரோகியத்தில் கவனம் மிக மிக அவசியம். எந்த காரியமும் நிதானமாகவும், ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் செய்து முடியுங்கள். கூட வேலை செய்பவர்களிடம் சற்று உஷாராக இருந்து பழகுங்கள். எதுவும் டிசைட் செய்கிரதிற்கு முன்பு இரண்டு தடவை யோசிக்கவும். சொத்து, பணம் சம்பந்த பட்ட விஷயங்களில் சிறப்பான நேரமில்லை. இன்வெஸ்ட்மென்ட் பார்த்து செய்யுங்கள். வியாபாரிகள், சொந்த தொழில் செய்பவர்கள் அதிக லாபம் எதிர் பார்க்க முடியாது. 

உறவுகள், சம்பந்தகளுக்கு இது சரியான சமயம் இல்லாததால் பேசுவதிலும் அணுகுமுறையிலும் மிக அதிகமாக நிதானம் தேவை. தாம்பத்திய உறவில் உங்கள் வாழ்கை துணையிடம் நிதானம் தவறினால், நிலைமை வேறு விதமாக மாறிவிடும். இது குடும்ப நலனுக்கு நல்லது இல்லை. 

இரண்டு முகி ருத்ராக்ஷத்தை, கங்கா ஜலத்தில் ஸ்நானம் செய்து ஈஸ்வரனுக்கு ஆராதனை, உபசார பூஜை, மந்த்ரம் ஜபித்து முடித்த பின் சிவ லிங்கத்தில் ஸ்பர்ஷம் செய்து கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து அணியலாம். 

வ்ருச்சிகம் 


இந்த மாதம், இரண்டு ஐந்து வீடுகளுக்கு அதிபதியான குரு பதினொன்றில் கோசாரம் செய்கிறார். இது நல்ல சமாஜாரம். சனி இன்னும் ஜன்ம ராசியில் வக்ரத்தில் இருக்கிறார். அதனால் நிலைமை அறிந்து நடந்து கொள்வது நல்லது. குருவின் கோசாரம் மனதிற்கு நிம்மதி தரும். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்பீர்கள். செய்யும் வேலையில் மாறுதல் இருக்கும். பொறுப்பு, கடமை ஜாஸ்தி ஆகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிச்சயம். மேலதிகாரிகளிடம் நன்றாக பழகுங்கள். சக பணியாளர்களிடம் சப்போர்ட் எதிர் பார்க்கலாம். ஸ்டாக் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். இன்வெஸ்ட்மென்ட் செய்ய நல்ல நேரம் இல்லை. ப்ராபெர்ட்டி, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், விவசாயம் போன்ற துறையில் இருக்கிறவர்கள் முனேற்றம் காணலாம். இட மாற்றம் வேண்டி காத்திருந்தவர்கள், இப்பொழுது தங்கள் இஷ்டம் போல் மாற்றம் காண்பார்கள். பிரயாணங்கள் கை கொடுக்கும். சிலர் வாழ்க்கையில் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற மங்களகரமான விஷயங்கள் நடக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் ரொம்பவும் ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டிய விஷயம். இதில் நிறைய கவனம் வேண்டும். 

செவ்வாய் யந்திரம், ம்ருத்யுன்ஜய யந்திரம் வைத்து பூஜை செய்யலாம். ஆஞ்சநேயருக்கு விளக்கு ஏற்றலாம். சனி ஸ்தோத்ரம், கணபதி ஆராதனை, துர்கா ஷப்தஷடி நல்லது செய்யும். 

தனுசு 


உங்களுக்கு இப்பொழுது நல்ல நேரம். சுற்றுலா, உல்லாச பயணம் போன்ற விஷங்களில் மனது லயிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பெயரும், பாராட்டும் புகழும் வந்து சேரும். ஆனால் கூட வேலை செய்யும் பணியாளர்களிடம் இருந்து நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கோவத்தை குறையுங்கள். வாழ்கை பன்மடங்கு இனிதாகும். குடும்ப பொறுப்புகள் காரணமாக லைஃப் ஹெக்டிக் ஆக இருக்கும். பண வரவு சீராக இருக்கும். தொட்டது பொன் ஆகும். பெயர், புகழ், லாபம் எல்லாம் உங்கள் திசையை நோக்கி ஓடி வரும். கடன் கொடுப்பதில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.உங்கள் கூர்மையான புத்தியினால் நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் உச்சத்தில் போவீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களை போற்றுவார்கள். ரத்த அழுத்தம், ஸ்கின் அல்லேர்ஜி போன்ற சாரீரக உபாதைகளை சரியான சமயத்தில் ட்ரீட் செய்யுங்கள்.

மகாலட்சுமிக்கு பூஜை ஆராதனை செய்யவும் பெரியோர்களுக்கு மரியாதை கொடுங்கள், வார்த்தைகளை அளந்து பேசுங்கள். எல்லா விதத்திலும் நன்மையாக இருக்கும். 

மகரம் 


உங்களுடைய முக்கால் வாசி கஷ்டங்கள் இந்த மாதம் முடிந்துவிடும். டென்ஷன் குறைந்த மாதிரி இருக்கும். வெற்றி உங்களை தேடி வரும். யார் பற்றியும் கவலை படாமல் உங்கள் வேலையை கவனியுங்கள். காதல் ஜோடிகளுக்கு இது உகந்த நேரம். ஆனால் தாம்பத்திய உறவில் கொஞ்சம் கவனமாக விஷயங்களை கையாளுங்கள்.குடும்பத்தில் குதூகலம் இருக்கும். சகோதரர் கூடபிரந்தோர் ஆதரவு கொடுப்பார்கள். நண்பர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும். கல்யாணம் ஆகாதவர்களுக்கு மண வாழ்க்கையில் ஒரு நல்ல நேரம். பணி செய்யும் இடத்தில், எல்லோரிடமும் நயமாக பழகவும், ஆதரவாக இருக்கவும். சகஊழியர்களிடம் மிகவும் மென்மையாக இருங்கள். யாரிடமும் கடினமாக இருக்க வேண்டாம். மாணவர்கள் பாடுபடவேண்டும். அப்பொழு தான் முன்னேறுவார்கள். வேலையில் உயர்வான நிலை அடைவதற்கு இந்த மாதம் ஒரு ஸ்டெப்பிங் ஸ்டோன் மாதிரி. உடல் ஆரோகியத்தில் கவனம் செலுத்துக. 


எல்லோரிடமும் குறிப்பாக பெரியோர்களிடம் அன்பாக இருங்கள். நன்னடத்தை, நற்சொல், பணிவு, உயர்ந்த நோக்கம், தார்மிக சிந்தனை, தான தர்மம் உங்களுக்கு பேரின்பமும் பரமானந்தமும் கொடுக்கும். 

கும்பம் 


மாணவர்களுக்கு ஒரு முக்கியமான நேரம். இத்தனை நாள் கடினமாக உழைத்தது, இப்பொழுது கைகொடுக்கும். வேலை செய்பவர்களுக்கு வேலையில் மேலதிகாரிகள் மூலம் ஊதிய உயர்வு, பணி உயர்வும் முன்னேற்றமும் உண்டாகும். நண்பர்களின் ஸப்போர்ட் என்கரெஜ்மெண்ட் மனதிற்கு நிம்மதி தரும். ஹெல்த் விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. தாம்பத்திய உறவில் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். வாதம், விவாதம், தர்க்கம் அவாயிட் பண்ணுங்கள். இன்வெஸ்ட்மென்ட் செய்வதற்கு இது நல்ல நேரம் இல்லை. ஆனால் எதிரிகள் அடங்கி இருப்பார்கள். வீட்டிலோ அல்லது பணி செய்யும் இடத்திலோ யாரையும் டாமினேட் செய்யாதீர்கள். குடும்பத்தில் உறுபினர்கள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள். குழந்தைகள் வேலையில் படிப்படியாக முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீக சொத்து, உடைமைகள் உங்களுக்கு வந்து சேரும். கடன் கொடுத்த பணம் திரும்பி வரும். வொர்க் லைஃப், பர்சனல் லைஃப் இரண்டிலும் பேலேன்ஸ் கொண்டு வர முயற்சியுங்கள். 

ஆஞ்சநேயருக்கு வெல்லம், பருப்பு கடலை செவ்வாய் சனி தோறும் நைவேத்யம் செய்யுங்கள். வீட்டில் கங்காஜலம் தெளியுங்கள்.

மீனம் 


வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகம் ஆகலாம். பதவி உயர்வு தடை படலாம். ஆனால் விஷயம் தலை மேல் போகாமல் நீங்கள் தான் கவனிக்கணும். வார்த்தைகளை ஜாகிரதையாக வெளியிடவும். எப்போதும் பாசிடிவ்வாக யோசியுங்கள். வம்பு பேசுகிறவர்கள், நெகடிவ்வாக யோசிக்கிறவர்களை கண்டு தாரளமாக தூர ஓடலாம்.மேலதிகாரிகளிடம் மரியாதையாக இருந்தால் நல்லது. எங்கும் தனியாக செல்ல வேண்டாம்.இந்த மாதம் குடும்பத்தில் குழப்பம் அல்லது ப்ராப்ளம் இருந்தால் ரிஸால்வ் பண்ண பாருங்கள்.குழந்தைகள் கெட்ட பழக்கம் உள்ளவர்களிடம் நட்பு அல்லது சிநேகிதம் வைத்து கொள்ளாமல் பார்த்துகொள்ளவும்.நீண்ட நேரம் வொர்க் பண்ணினாலும் நடுவில் ப்ரேக் எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் தகுதிக்கு முடிந்த மாதிரி தான தர்மம் செய்யுங்கள். பட்சிகளுக்கு அன்னம் போடுங்கள். கோவத்தை குறையுங்கள். எல்லோரிடமும் அன்பாக இருங்கள். எல்லாம் நன்றாக இருக்கும்.
Read More »