டிஸெம்பர் 2016 ராசி பலன்

மேஷம் 


குடும்பத்தினருடன், சொல்ல போனால் தாயுடன், உறவு இம்ப்ரூவ் பண்ணுங்கள். எல்லோரையும் அணைத்து கொண்டு போங்கள். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். குழந்தைகள் தொந்தரவு ஜாஸ்தி ஆக இருக்கும். கோவம் படாமல் பார்த்து டீல் செய்யுங்கள். காதல் விஷயத்திற்கு நல்ல நேரம். வேலையில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். உங்களுடைய பிளானிங் நூதனமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். பண வரவு ரொம்ப நன்றாக இல்லாவிட்டாலும் சேமிப்பு நன்றாக இருக்கும். வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், ஆழ்ந்த ஈடுபாடு, உழைப்புடன் நீங்கள் டார்கெட்டை அசீவ் செய்வீர்கள். இருந்தாலும் வேளையில் ஸ்ட்ரெஸ் அதிகம் ஆவதிகள் மனதில் திருப்தி இருக்காது.அரச மரத்திற்கு தீபம் ஏற்றி ஜலம் அற்பணியுங்கள். ராஹு, சனி, செவ்வாய் பரிகாரம் மிகவும் நன்மையுடையடாக இருக்கும்.

ரிஷபம் 


இந்த மாதம் பேரின்பம், ஆனந்தம், அபிவ்ருத்தி நிறைந்ததாக இருக்கும். குருவின் நல்ல பார்வை இருக்கிறதால் அதிர்ஷ்டம், செல்வம் உங்கள் பக்கம். நண்பர்கள், உற்றார் உறவினர்களிடம் சம்பந்தங்கள் சிறப்பாக இருக்கும். உங்கள் யோசனை, கருத்துகளை வரவேற்பார்கள். நீங்கள் நிரம்பவும் ஆப்டிமிஸ்டிக் ஆக இருப்பீர்கள். ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்கிறதிற்கு முன்பு நன்றாக யோசிக்கவும். ப்ராபர்ட்டி, வீடு, நன்றாக யோசித்து முடிவெடுக்கவும். வேலை செய்யும் இடத்தில் கொலீக்ஸ் ரொம்பவே சப்போர்டிவ் ஆக இருப்பார்கள். ஆனால் மேலதிகாரிகள் பக்கத்திலிருந்து பிரச்சனை கட்டாயம் இருக்கும். ஆனால் கல்யாணம் செய்ய விரும்புவோர்களுக்கு இது ரொம்பவே நல்ல நேரம். 

செவ்வாய் கிரஹத்திற்கு பரிகாரம் செய்யுங்கள். அங்காரகனுக்கு ஸ்லோகம் படியுங்கள். பண விரயம் குறையும்.

மிதுனம் 


உங்கள் காரியத்தை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். ஆனால் செலவுகள் மீது ஒரு கண் வைத்து கொள்ளவும். ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்வதற்கு இது உகந்த மான நேரம். அட்மினிஸ்ட்ரேடிவ் விவரங்களில் உங்கள் ஆற்றல் பளிச்சிடும். வேலை செய்யும் இடத்தில் யாரிடமும் கடுமையாக பேச வேண்டாம், எல்லோரிடமும் நன்றாக பழகவும். குடும்பத்திற்கு நிறைய டைம் கொடுப்பீர்கள். தாம்பத்திய உறவில் ஜாக்கிரதையாக விஷயத்தை கையாளவும். வாதம், விவாதம் இரண்டிற்கும் இடம் கொடுக்க வேண்டாம். குழந்தைகள் விஷயத்தில் கொஞ்சம் அண்டர்ஸ்டேண்ட்டிங் தேவைப்படும். நிலைமையை நிதானமாக மேனேஜ் செய்து அவர்களுக்கு புரிய வையுங்கள்.பண வரவு சுமாராக இருக்கும். செய்கிற வேலையில் கவனம் கொடுத்து செய்யுங்கள். உங்கள் வியாபாரம் விஷயமாக நீங்கள் அனுபவமுள்ளவர்களை சந்திப்பீர்கள். உங்கள் செலவுகள் குறையும். ஹெல்த் விஷயத்திற்கு இது சாதாரணமான சமயம். வேலையில் ஸ்ட்ரெஸ் எடுத்துக்காமல் வொர்க் செய்யுங்கள். 

சனி யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜை, ஆராதனை செய்யுங்கள்.

கடகம் 


சில தடங்கல்கள் உங்கள் கார்யக்ஷேத்திரத்தில் வரும். உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் அதிகமாக நீங்கள் உழைக்க வேண்டி வரும். உங்கள் பிளான், சின்னதோ பெரியதோ, இந்த மாதம் நிறைவு அடையும். இந்த மாதம் எல்லா விதத்திலும் மிகவும் சுபமாக முடியும். உங்கள் கடினமான உழைப்பிற்கு உங்கள் வெற்றி கண்ணாடி மாதிரி வேலை செய்யும். அமைதியாகவும், மௌனமாகவும் இருந்து நீங்கள் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். லக் உங்கள் பக்கம் இருந்தாலும், ஹார்ட் வொர்க் செய்கிரதை விட மாட்டீர்கள். நண்பர்கள், குடும்பத்தினர்கள் ஆதரவு இருந்தாலும் மனதில் ப்ரேஷேர் இருக்கத்தான் செய்யும்.குழந்தை வேண்டியவர்களுக்கு இது நல்ல சமயம். தாம்பத்திய உறவிலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் கூட வேலை செய்வோரின் பாலிடிக்ஸ் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், பார்த்து சமாளியுங்கள். சிலர் தார்மீகம், ஆன்மீகம் போன்றவற்றில் இன்டெரெஸ்ட் எடுத்து கொள்வார்கள். குடும்பத்தில் சந்தோஷம், அமைதி காக்க முயற்சி செயுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. 

கேது, செவ்வாய், சனி பரிகாரம் செய்யுங்கள். எல்லா விஷயத்திலும் நன்மை தரும்.

சிம்மம் 


இந்த மாதம் லைக் மைன்டெட் மனிதர்களுடன் காரியமும் சம்பந்தமும் செய்ய வேண்டி வரும். எவ்வளவு தான் நிலைமை மோசமாக இருந்தாலும், பாசிடிவ் ஆக திங்க் செய்யுங்கள், இருங்கள். பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்கிறது ரொம்ப அவசியம். அதை மறக்காதீர்கள். ப்ராப்பர்ட்டி விஷயத்தில் இன்வெஸ்ட்மென்ட் வேண்டாம். காதல் விவகாரம் களிப்பு தரும். தாயின் ஆரோகியதில் கவனம் தேவை. கோவத்தை குறைத்து கொள்ளவும். தர்க்கம், விவாதம் அவாய்ட் செய்யுங்கள். கடன் எந்த ரூபத்திலும் வேண்டவே வேண்டாம். புதிய முயற்சியில் நல்லதொரு திருப்பம் இருக்கிறது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு கட்டாயம் கிடைக்கும். உடல் ஆரோகியதில் மிக அதிகமாக கவனம் தேவை. 

பைரவருக்கு பூஜை ஆராதனை செய்யுங்கள். இது ஒரு பிரமாதமான ராஹு பரிகாரம்.

கன்னி

 

இந்த மாதம் மிஸ்ர பலன் கிடைக்கும். உங்கள் புத்தியை உபயோகம் செய்யது முன்னேற்றம் காணுங்கள். எதிரிகள் பிரச்சனை கிளம்புவார்கள். ஆனால் லக் உங்கள் பக்கம். அதனால் தைர்யமாக, சந்தோஷமாக இருங்கள். வீடு, மணை விஷயம் இந்த மாதம் வேண்டாம். செய்யும் வேலையை கவனமாக செய்யுங்கள். இல்லாவிட்டால் பிரச்னை கட்டாயம் வரும். அமைதி, எல்லோரின் அன்பு இது தான் முக்கியம் என்று அறியுங்கள்.அக்கம் பக்கத்தவர்களுடன் ஜாக்கிரதையாக இருக்கவும். கேளிக்கை, குதூகலம் என்று லைஃப் என்ஜாய் செய்யுங்கள். பேசும் முறையில் நிதானம் தேவை. ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிக்கவும். வீட்டிலோ வேலை செய்யும் இடத்திலோ கருத்து வேற்றுமை இருந்தால், தர்க்கம் வேண்டாம். மன நிம்மதிக்கு ஆன்மீகத்தில் இறங்குங்கள். 

ஒரு முகி ருத்திராக்ஷம் அணியுங்கள். செல்ல விதத்திலும் நன்மை தரும்.

துலா 


ரொம்பவும் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய மாதம் இது. மன வேதனை, டென்ஷன் என்று பல விதமாக அமைதியின்மை இருக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். காதல் ஜோடிகள் கண்ணாம்பூச்சி விளையாடாமல் புரிந்து கொண்டு நடக்கவும். லைஃப் பார்ட்னருடன் அன்பாகவும் மரியாதையாகவும் இருக்கவும். சனி குரு கோசாரம் சரியாக இல்லாததால், வாழ்க்கை வெறுமையாக இருக்கிறமாதிரி இருக்கும். போக போக சரியாகும். எக்ஸ்ட்ரா முயற்சி செய்து பேலன்ஸ் பண்ணுங்கள். 

மூன்று முகி ருத்திராக்ஷம் அணியுங்கள். நல்லது செய்யும்.

விருச்சிகம் 


திடீர் என்று சில விஷயங்கள் நடக்கும். லக் மீது மட்டும் நம்பிக்கை வைக்காமல், உங்கள் கடின உழைப்பிற்கும் மதிப்பு கொடுங்கள். மனதிற்கு பிடிக்காமல் சில விஷயங்கள் நடக்கலாம், ஆனாலும் உங்கள் வில் பவரினால் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு சரி செய்வீர்கள். வேளையில் மாற்றமோ உயர்வோ கடினமாக வொர்க் செய்தபிறகு வரும். வியாபாரிகளுக்கு நல்ல நேரம். கடன் வாங்க நல்ல நேரம் இல்லை.பண வரவும் இருக்கும், செலவும் இருக்கும். எதிரிகள் தொந்தரவு இருக்காது. ஒரு நிலை இல்லாமல் தவிப்பீர்கள். எந்த விஷயத்திலும் ஸ்ட்ரெஸ் எடுத்துக்க வேண்டாம். டீச்சிங், மெடிக்கல், பேங்கிங் செக்டரில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். 

சனி பரிகாரம், ஆஞ்சநேயர் பூஜை, குல குருவிற்கு மரியாதை மிகவும் நன்மை செய்யும்.

தனுசு 


தடங்கல் நிறைத்த மாதம். ஆனால் தன்னம்பிக்கையுடன், கடின உழைப்புடன் முன்னேறுவீர்கள். லாங் டேர்ம் பிளானிங் செய்தால் நல்லது. வேலை மாற்றம், டிரான்ஸ்ஃபர் விஷயங்களுக்காக வைட் செய்தவர்களுக்கு கூட் நியூஸ். உங்கள் ஸ்ரத்தை, நேர்மை, நல்ல குணத்திற்கு எல்லாம் நல்ல படியாக மாறும். தாம்பத்திய உறவில் அன்பு, பரிவு, புரிந்துகொள்ளுதல் இருக்கும். காதல் ஜோடிகள் என்ஜாய் செய்யலாம். டேட்டிங் விஷயத்திற்கும் நல்ல டைம்.பரிவாரக சுகம், அன்பு நிறைய இருக்கு, கிடைக்கவும் செய்யும். வேலையில் அந்தஸ்து உயரும், பண வருவாய் அதிகரிக்கும். 

கட்டுப்பாடு மிகவும் அவசியம். சனிக்கு என்ணை தீபம் ஏற்றுங்கள்.

மகரம் 


பரிவாராக சுகம், வேலையில் நிம்மதி, உற்றார் உறவினர் நட்பு, நண்பர்களின் ஆதரவு எல்லாம் வாழ்க்கையில் ஒரே இன்ப மயம், மகர ராசிகாரர்களே. பண வரவு நன்றாக இருக்கும். மாணவர்கள் எக்ஸ்ட்ரா எஃப்போர்ட்ஸ் கொடுக்க வேண்டி வரும். பணிவாகவும், மரியாதையாகவும் எல்லோரிடமும் இருந்தால், லைஃப் ரொம்ப ஸ்மூத் ஆக இருக்கும். உங்கள் ஆற்றல் பளிச்சிடும், திறமை அதிகரிக்கும், புத்தி கூர்மையாகும், வாக்கு சாதுர்யம், பேச்சில் மதுரம் இருக்கும். இது உங்களுக்கு ரொம்பவே நல்லது செய்யும். லாபம், பண வருவாய் அதிகரிக்கும். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். 

காயத்ரி மந்திரம் படியுங்கள். காலையில் விஷ்ணு பூஜை செய்யுங்கள்.

கும்பம் 


நீங்கள் நினைத்ததற்கு விஷயம் வேறு விதமாக மாறலாம். லக் மட்டும் போறாது. கடினமாக, மும்முரமாக உழைப்பு தேவை. வொர்க் ப்லேஸிலும் குடும்பத்திலும் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்க தான் செய்யும். பார்த்து கொள்ளுங்கள். நிதானமாக, அமைதியாக விஷயத்தை சால்வ் செய்யுங்கள். பண வருவாய் அதிகரிக்கும். கடனும் வாங்குவீர்கள். சேமிக்கவும் செய்வீர்கள். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கவும். ப்ரமோஷன் கட்டாயம் கிடைக்கும். குடும்பத்தில் எல்லோரும் கொஆப்ரெட் செய்வார்கள். ஸ்ட்ரெஸ் எடுத்துக்கொள்ளவேண்டாம். 

செவ்வாய் கிழமை விரதம் மேற்கொள்ளவும். தான, தர்ம கார்யங்கள் மூலம் பரிகாரம் செய்யவும்.

மீனம் 


வேலை செய்யும் இடத்தில், உங்கள் திறமை ஓங்கும், எல்லோரூம் மதிப்பார்கள், போற்றுவார்கள். கலை,சங்கீதம், இலக்கியம் போன்ற விஷயங்களில் உங்கள் ஆர்வம் நிறைய இருக்கும். சிலர் உங்கள் மீது பொறாமை கொண்டு பழி சுமத்துவார்கள். ஜாக்கிரதியாகவும் டைராயமாகவும் விஷயத்தை ஹேன்டில் செய்யவும். காதல் விவகாரத்தில் ப்ராப்ளேம் வராமல் பார்த்துக்கணும். இன்வெஸ்ட் பண்ணுகிறதிற்கு நல்ல நேரம் இல்லை. வெளி மனுஷர்கள் தலையீடு இருந்தால், ரொம்பவே மெதுவாக ஆனால் கண்டிப்பாக அவர்களிடம் சொல்லவும். நிறைய பணம் சம்பாதிப்பீர்கள்,சேமிப்பீர்கள். தான தர்மத்தில் செலவும் செய்வீர்கள். உடல் ஆரோகியதில் கவனம் தேவை. 

சனீஸ்வரனுக்கு ப்ரீதீ செய்யுங்கள். என்னை விளக்கு சனி கிழமை தோறும் அரச மரத்திற்கடியில் ஏற்றவும்.

Related Articles:

No comments:

Post a Comment