பிப்ரவரி 2017 ராசி-பலன்உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த பிப்ரவரி 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும்

மேஷம்


சனியின் ஒன்பதாவது வீட்டு கோச்சாரம் தகப்பனாரின் ஆரோகியத்தையும் சுகத்தையும் கெடுக்கும். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். செய்யும் வேலையில் முன்னேற்றமும் லாபமும் கட்டாயம். உங்கள் பாக்கியம் பிரகாசமாக இருக்கும். உங்களுக்கு பாராட்டும், புகழும், பதவி உயர்வும் நிச்சயம். நீங்கள் கார்யம் சம்பந்தமாக பிரயாணம் செய்ய நேரிடலாம். ராகுவின் 5ஆம் வீட்டு சஞ்சாரம் குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் தகராறு கொடுக்கும். மேலும் அவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். வயறு சம்பந்த விஷயத்தில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குருவின் 6ஆவது வீட்டு கோச்சாரம் உங்களை கடினமாக போராட வைக்கும். எதிரிகள் உங்களிடம் வால் ஆட்ட மாட்டார்கள். கேதுவின் 11 ஆவது வீட்டு சஞ்சாரம் உங்களுக்கு எல்லா விதத்திலும் லாபமாக இருக்கும். இது உங்களின் சாகஸத்தை விருத்தி செய்ய வல்லது. முன்பை விட நீங்கள் உடலில் சக்தியும் உள்ளத்தில் ஆற்றலும் அதிகம் உணர்வீர்கள். சுக்கிரன், செவ்வாய் 12ஆம் வீட்டு சஞ்சாரம் வெளிநாடு செல்லும் யோகம் கொடுக்கும்.

காலையில் எழுந்தவுடன் பூமியை வணங்கிவிட்டு மற்ற வேலை கவனிக்கவும்.

ரிஷபம்


இந்த மாதம் அஷ்டம சனியின் ப்ரபாவத்தினால் உங்கள் ஆர்வம் ஆன்மீகத்திலும் தத்துவத்திலும் செல்லும். செய்யும் வேலையில் மாற்றம் இருக்கும் மற்றும் சில தொந்தரவுகளும் கூடவே இருக்கும். சிலருக்கு பணியில் லாபமும் கிட்டும். ராகுவின் 4ஆம் வீட்டு கோச்சாரம் மனதளவில் அதிருப்தியும் அழுத்தமும் கொடுக்கும். உங்கள் தாய்க்கு ஆரோக்கியம் சம்பந்தமாக சில பிரச்னைகள் வரலாம். பரிவாரகத்தில் சண்டை-சச்சரவு போன்ற விவகாரங்கள் வரலாம். ஜாகிரதையாக கையாளுங்கள். சிலருக்கு கார்ய சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். வேலை விஷயத்தில் பார்த்து நடந்து கொள்ளுங்கள். கேதுவின் 10ஆம் வீட்டு கோச்சாரம் பணியில் சில திடீர் திருப்பங்கள் கொடுக்கலாம். குடும்பத்தை விட்டு வெகுதூரம் செய்ய நேரிடலாம். ஆன்மீக பிரயாணம் மற்றும் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் ஈடுபாடு உண்டாகும். சூரியனின் 9ஆம் வீட்டு சஞ்சாரம் மேல் அதிகாரிகளிடமிருந்து அன்பும் ஆதரவும் கொடுக்க வல்லது. சுக்கிரன்-செவ்வாய் 11ஆம் வீட்டு சஞ்சாரம் லாபம் மற்றும் திட ஆரோக்கியம் கொடுக்கும். உங்கள் வியாபாரம் விருத்தி அடையும் மற்றும் வாழ்க்கை துணையின் மூலம் நல்ல சமாச்சாரம் கிட்டும். குருவின் 5ஆம் வீடு கோச்சாரம் உங்களுக்கு மன நிம்மதியும், சமய ஈடுபாடும், குழந்தைகள் விஷயத்தில் நிறைவும் கொடுக்கும்.

வெள்ளியினால் ஆன அணிகலன்கள் மற்றும் பொருள்கள் உபயோகியுங்கள்.நன்மை தரும்.

மிதுனம்


சனியின் 7ஆம் வீட்டு சஞ்சாரம் வெகுதூர பயணமோ வியாபார சம்பந்தமான வெளிநாட்டு பிரயாணமோ கொடுக்கலாம். சிலருக்கு பரம்பரை சொத்து வர வாய்ப்பு இருக்கிறது மற்றும் தந்தை வழியிலிருந்து ஆதரவு கிட்டும். உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இது. ராகுவின் மூன்றாம் வீட்டு கோச்சாரம் காரணமாக உங்கள் ஆற்றலிலும் பராக்ரமத்திலும் பன் மடங்கு உயர்வு நீங்கள் காணலாம். செய்யும் காரியத்தில் உங்கள் திறன் பளிச்சிடும். கேதுவின் 9ஆம் வீட்டு சஞ்சாரம் உங்கள் தந்தையின் ஆன்மீக வளர்ச்சியில் உதவி செய்யும். சிலர் புனித பிரயாணம் மேற்கொள்ளலாம். குரு 4ஆம் வீட்டில் இருப்பது உங்கள் மன நிம்மதியை அதிகரித்து உங்கள் தியானத்தை நல்ல சமாச்சாரங்களில் திருப்பும். குடும்பத்தில் குதூகலமும் மகிழ்ச்சியும் இருக்கும். தாயின் உடல் ஆரோகியமும் மன நிறைவும் ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரி க்கலாம். செய்யும் வேலையில் பதவி உயர்வும் விருத்தியும் அடைய நல்ல வாய்ப்பு கிட்டும். ராசி நாதன் புதனின் 7ஆம் வீட்டு சஞ்சாரம் நல்ல திருப்பங்களையும் பண விஷயத்தில் திருப்தியும் கொடுக்கும். செவ்வாய்-சுக்கிரன் 10ஆம் வீட்டு சஞ்சாரம் பதவியில் நல்ல மதிப்பு கொடுக்கும் மற்றும் உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்க வழி வகுக்கும். 

பச்சை நிற கண்ணாடி பாட்டிலில் ஜலம் நிரப்பி வெய்யிலில் வைத்து அதை உட்கொள்ளுங்கள்.

கடகம்


இந்த மாதம் சனியின் 6ஆம் வீட்டு சஞ்சாரம் உங்களின் விரோதிகளை அடக்க வல்லது. எவரும் உங்களுக்கு கெடுதல் செய்ய முடியாது. வேலை செய்யும் திறன் பன் மடங்கு ஓங்கும் மற்றும் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். ராகுவின் 2ஆம் வீட்டு சஞ்சாரம் பண விவகாரத்தில் பிரச்னைகளை உண்டு பண்ணி தன நாசம் பண்ணும். கவனம் தேவை. இந்த சமயத்தில் குடும்பத்தில் வீண் வம்புகள் மற்றும் கலகங்கள் வளர மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. பணியில் சக ஊழியர்களிடம் மேல் அதிகாரிகளிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வது நல்லது. குருவின் 3ஆம் வீட்டு சஞ்சாரம் பாகியத்தை பிரகாசிக்கும், மேலும் 7ஆம் வீட்டில் படும் பார்வை வியாபாரம் மற்றும் தாம்பத்திய சம்பந்தங்களுக்கு நல்லது. கேதுவின் 8ஆம் வீட்டு சஞ்சாரம் உங்கள் ஆன்மீக வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் கொடு வர வல்லது. சூரியனின் 7ஆம் இடத்தில் இருப்பது உங்கள் வாழ்க்கை துணையுடன் சில தகராறுகள் உண்டு பண்ணலாம்; வியாபாரத்திலும் பண பிரச்னைகள் கிளப்பலாம். சுக்கிரன்-செவ்வாயின் 9ஆம் வீட்டு கோச்சாரம் பாகியத்தை பிரகாசித்து, செய்யும் வேலையில் வளர்ச்சி கொடுத்து, குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கட்டாயம் கொடுக்கும்.

பக்ஷிகளுக்கு தானியமும் ஜலமும் கொடுங்கள்; நல்லது நடக்கும்.

சிம்மம்


இந்த மாதம் ராகு உங்கள் ஜென்மத்தில் இருப்பதால், உடல் ஆரோகியதில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் விஷயத்தில் ஜாகிரதையாக இருக்கவும். வயறு சம்பந்த தொந்தரவுகள் வரும் போகும். குருவின் 2ஆம் இட சஞ்சாரம் குடும்ப சம்பந்தங்களுக்கு நல்லது செய்யும். தேவையான ஆடம்பர சாமான்களும் சுகத்திற்கு உதவும் பொருட்களும் தானாகவே வந்து குவியும். செய்யும் பணியில் மேல் அதிகாரிகளின் பாராட்டு, மற்றவர்களின் ஆதரவும் நன்கு கிட்டும். இந்த சமயம் உங்களுக்கு வலை மூலம் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. சனியின் பிரபாவம் மூலம் வாழ்க்கை துணையின் ஆதரவும் செய்யும் வேலையில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் கார்ய க்ஷேத்திரத்தில் நல்ல திருப்புமுனை இருக்கிறது. கேதுவின் 7ஆம் இடத்தில் இருப்பது வியாபாரத்தில் புதிய மற்றும் நூதன மாற்றங்களை குறிக்கிறது. மேலும் இதனால் வாழ்க்கை துணையின் சுகாதாரம் கெடும். செவ்வாய்-சுக்கிரன் 8ஆம் இட அமைப்பு வாழ்க்கையில் முக்கியமாக தொழிலில் நிறைய மாற்றம் கொண்டு வரும். கவனமாக ஏற்றுக்கொள்ளவும். ராசி நாதன் சூரியனின் 6ஆம் இட நிலை நல்லது இல்லை என்றாலும், உங்கள் பராக்ரமும் சாகசமும் பெருகும்.

சூர்யோத யோக-அப்யாசம் மற்றும் பிராணாயாம் செய்வது நல்லது.

கன்யா


தேவகுரு ப்ருஹஸ்பதியின் ஜென்மத்தில் இருப்பது உங்களின் சாத்வீக மற்றும் ஆன்மீக குணங்களில் விருத்தி செய்யும். குழந்தைகளின் வாழ்க்கை மேலுக்கு மேல் உயரும். தந்தையின் சன்மானமும் அந்தஸ்தும் உயர்வு காணும். ராகுவின் 12ஆம் இட அமைப்பு பண விரையம் கொடுக்கும். தாயின் உடல் நிலை கவலை கொடுக்கும். செய்யும் வேலையில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி வரும். வாழ்க்கை துணையுடன் நல்ல உறவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஆனால் இன்வெஸ்ட்மென்ட் செய்யும் முன் கொஞ்சம் நிதானமாக இருக்கவும். கேதுவின் 6ஆம் வீட்டு கோசாரம் உங்கள் விரோதிகளை அடக்கி வைக்கும். காம்பெடிட்டிவ் எக்ஸாம்ஸ் போன்ற விஷயத்தில் நீங்கள் பிரமாதமாக செய்து முடிப்பீர்கள்.

வெண்கலம் வலது கையில் அணிந்து நன்மை பெறவும்.

துலாம்


சனியின் மூன்றாம் இட கோச்சாரம் ஏழரை நாட்டு சனிக்கு முற்று புள்ளி வைக்கிறது. உங்கள் சாகசம், பராக்ரமம், ஆற்றல் மற்றும் புத்திசாலித்தனம் பளிச்சிடும். கூட பிறந்தோரிடம் நல்ல சம்பந்தம் வைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தில் குதூகலம் இருக்கும். புதனின் மூன்றாம் இட சஞ்சாரம் பாக்கியத்தை பிரகாசிக்கும். ராகுவின் 11ஆம் வீட்டு சஞ்சாரம் பல விதத்தில் நன்மை செய்யும். கேதுவின் 5ஆம் இட அமைப்பு உங்களுக்கு ஆன்மீகத்திலும் தத்துவ ஞானத்திலும் ஆர்வம் உண்டாக்கி ஆத்ம விகாசத்திற்கு சஹாயோகம் செய்யும். கொஞ்சம் உடல் ஆரோகியதில் கவனம் செலுத்தினால் உங்களுக்கு ரொம்ப நல்லது.தாய் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீடு, மனை வாங்குவதற்கு இது நல்ல நேரம்.

பால் பண்டங்களை உட்கொள்ளுங்கள்; மற்றவர்களுக்கும் கொடுங்கள்.

வ்ருச்சிகம்


சனியின் இரண்டாம் கோச்சாரம் பண விஷயத்தில் தகராறு செய்யும்; பண தட்டுப்பாடு நீடிக்கும். தாயின் ஸ்வபாவத்தில் விரக்தி காண்பீர்கள்; அவர்கள் ஆரோகியத்திற்கும் பங்கம் வரும். வீடு,மனை மூலம் லாபம் கட்டாயம். வீடு வாங்குவதற்கும் இது ஒரு பிரமாதமான நேரம். குருவின் 11ஆம் வீட்டு கோச்சாரம் எல்லா வித நன்மை கொடுக்கும். மனதை திருப்தியாகவும் நிம்மதியாகவும் வைப்பதற்கு நீங்கள் படாத பாடு படுவீர்கள். சிலர் இடமாற்றம் காணலாம்; வேறு பலர் செய்யும் காரியத்தில் நிறைய மாற்றங்கள் காண்பார்கள். வேலை மாற்றம் ஆனாலும் ஆகலாம். நீங்கள் வேலை சம்பந்தமாக வெகுதூர பிரயாணம் மேற்கொள்வீர்கள். பரிவாரகத்தில் சந்தோஷமின்மை ஓங்கும்.

பரிசுத்தமான தேன் உட்கொண்டால் ஆரோகியத்திற்கு நல்லது. சனி ப்ரீத்தி செய்யவும்.

தனுசு


சனியின் ஜென்ம கோச்சாரம் மனதில் அழுத்தம் கொடுத்தாலும், சகோதர வழியில் நல்ல பலனை தர வல்லது. வியாபாரத்தில் வளம் காண்பீர்கள்; செய்யும் வேலையை நன்றாகவும் கடினமாக உழைத்தும் செய்வீர்கள். ராசி நாதன் குருவின் 10ஆம் வீட்டு சஞ்சாரம் பதவி உயர்வு, பண உயர்வு, சன்மானம், நல்ல பெயர், மதிப்பு மற்றும் செய்யும் வேலையில் ஒரு மன நிறைவும் திருப்தியும் கட்டாயம் தரும். உங்கள் உடல் வலிமை, புத்தி கூர்மை, வாக்கு சாதுர்யம் போன்றவை வளம் காணும். குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். ராகுவின் 9ஆம் வீட்டு சஞ்சாரம் தந்தையின் உடல் நிலையை பாதிக்கலாம். ஆன்மீக சம்பந்தமான பிரயாணம் மேற்கொள்வீர்கள். எல்லா விஷயத்திலும் தைர்யமாக செயல் படுவீர்கள். வாழ்க்கைத்துணை ஆரோக்கியத்தில் கவனக்குறைவு கூடாது. சிலர் வீட்டில் அமைதியின்மை காண்பார்கள். சொத்து விவகாரத்தில் பிரச்சனைகள் வந்தால் பார்த்து சமாளியுங்கள். 

மஞ்சள் மற்றும் குங்குமப்பூ திலகம் இட்டு கொள்ளுங்கள்; நல்ல பலன்கள் அதிகரிக்கும். 

மகரம்


சனியின் 12ஆம் இட கோச்சாரம் வெளிநாட்டில் இருந்து நல்ல சமாசாரங்கள் மற்றும் லாபங்கள் கொண்டு வர வல்லது. தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. நீங்கள் வெகுதூர வெளிநாட்டு பிரயாணம் செய்யலாம். பணம் அதிகமாக செலவு ஆகும்; ஜாக்கிரதையாக நிலைமையை சமாளியுங்கள். ஆன்மீக விவகாரத்திலும், பூஜை புனஸ்காரத்திலும், தேவ ஆலய தரிசனத்திலும் படு வேகமாகமாக இறங்குவீர்கள். ராகுவின் 8ஆம் வீட்டு கோச்சாரம் தாயின் சுகத்திற்கு கெடுதல் செய்யும். வாஹனம் ஓட்டுவதில் கவனம் தேவை; வேண்டாத பிரச்னைகளை தவிர்க்கும். தாம்பத்திய உறவில் நிதானமாக செயல் பாடவும்; விவாதம், வேறு பாடு விஷயங்களை தவிர்ப்பது நல்லது.செய்யும் வேளையில் மாற்றம் இருக்கும்; சிலர் கார்ய-சம்பந்த பிரயாணமும் செய்வார்க கேது 2இல் இருந்து செலவை அதிகரிப்பார். சிலர் வேலையில் நல்ல வளம் காணலாம்.

ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்யுங்கள்; வாழ்க்கையில் சுபம், மங்களம் உண்டாகும்.

கும்பம்


ராசி நாதன் சனியின் 11ஆம் இட கோச்சாரம் எல்லா விதத்திலும் லாபமும் நன்மையும் செய்யும். கடினமாகவும் சந்தோஷமாகவும் உழைப்பீர்கள். உங்கள் குழந்தவர்கள் தங்கள் படிப்பில், வேலையில் முன்னேறுவார்கள். சிலர் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வார்கள். குருவின் 8ஆம் இட சஞ்சாரம் உங்கள் தாய் தந்தையின் ஆன்மீக வளர்ச்சிக்கு மகத்துவம் கொடுக்கும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உள்ளது. ராகுவின் 7ஆம் இட சஞ்சாரம் தாம்பத்திய உறவிற்கு பிரச்னை தரும். சிலர் வியாபாரத்தில் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் எதிர் பார்க்கலாம். கேதுவின் ஜென்ம சஞ்சாரம் ஆன்மீகத்தில் ஆர்வமும், சாமான்ய வாழ்க்கையில் பற்றிமையும் கொடுக்கலாம். உடல் ஆரோகியதில் கவனம் வேண்டும். சிலர் வீடு மற்றும் வாகன பிராப்தி செய்வார்கள்.

ஏழை எளியோர்களுக்கு நல்லது செய்து உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களுக்கு அடிகோல் போடுங்கள்.

மீனம்


சனியின் 10ஆம் இட சஞ்சாரம் காரியத்தில் கடினமாக உழைக்க ஊக்குவிக்கும்.நன்றாகவும் வேலை செய்து எல்லோர் பாராட்டும் பெறுவீர்கள். தாயின் உடன் நிலையில் கவனம் தேவை. மனதி அழுத்தம் இருக்கும். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். உடல் வலிமையுடன் இருக்கும்; எந்த ஒரு காரியத்தை எடுத்து முடிக்கிற சக்தியும் தரும். ராசிநாதனின் ஏழாவது இட கோச்சாரம் எல்லா விதத்திலும் நல்லது செய்யும். தார்மிக, ஆன்மீக விஷத்தில் ஆர்வம் பொங்கும். சிலர் ஆன்மீக சங்கத்துடன் சம்பந்தம் கொள்வார்கள். குழந்தைகள் விஷயத்தில் சிறு கவனம் பெரிய பிரச்னையை தவிர்க்கும். புதனின் 10ஆம் இட கோச்சாரம் வியாபாரத்தில் விருத்தி கொடுத்து கிக லாபம் சம்பாதிக்க வழி வகுக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். 

ஸ்நானம் செய்யும் ஜலத்தில் மஞ்சள் தூவி உபயோகியுங்கள்; சுபமாக இருக்கும்.

Related Articles:

No comments:

Post a Comment