நாக பஞ்சமி - சர்ப்ப தோஷ நிவர்த்தி செய்யலாம், வாருங்கள்!

நாக பஞ்சமி


ஆகஸ்ட் 7

முஹூர்த்தம்: 06:17:15 முதல் 08:51:57 வரை ஐ.எஸ்.டி.

உங்கள் நகரத்தின் முஹூர்த்தம் அறிவதற்கு, இங்கு க்ளிக் செய்யுங்கள்: நகர முஹூர்த்தம்

இந்த வருட நாக பஞ்சமி ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படும். இது வளர்பிறை / ஷுக்ல பக்ஷத்தில் கடைபிடிக்கப்படும். சிவ பக்தர்களும் சக்தியை வழிபடுகிறவர்களும் இதை கடைபிடிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். நாக பஞ்சமியை அனுஷ்டிப்பதால் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷத்திலிருந்து முக்தி கிடைக்கும். 

மஹாதேவர் நாக லோகத்தையும் ஆள்கிறவர். இவரை பூஜிப்பதால் நமக்கு நாகர்களின் சாபத்திருந்தும் தோஷத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும். கட்டாயம் தோஷத்தின் தாக்கம் குறையவே செய்யும். 

நமது இந்திய ஜோதிடத்தில் நாக தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப தோஷம் போன்ற சொற்கள் நிறைய வரும். இதன் அர்த்தம் என்னவென்றால், முற்காலம் அல்லது முந்திய ஜென்மத்தில் மனிதர்களினால் சர்பங்களுக்கு ஏதாவது கொடுமை அல்லது வேண்டாதவை நடந்திருக்குமானால், அதன் பிரதி பலன் இந்த ஜென்ம கர்மாவாக வந்து நமது ஜாதகத்தில் ஒரு தோஷத்தின் ரூபமாக வரும்.

சர்ப்ப தோஷம் நமது ஜாதகத்தில் எப்படி காணப்படும்? எல்லா கிரஹங்களும் ராஹு கேதுவிற்கு மத்தியில் இருக்குமானால் ஜோதிடர்கள் அந்த நிலையை கால சர்ப்ப தோஷம் என்று குறிப்பிடுவார்கள். 

ராஹுவும் கேதுவும் சர்பங்களாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு கோள்களுக்கு நடுவில் மற்ற கோள்களான சூர்யன், சந்திரன், செவ்வாய், புதன், ப்ருஹஸ்பதி, சுக்கிரன், மற்றும் சனி இருக்கும் பட்சத்தில் ஒரு கஷ்டமாந யோகம் உருவாகிறது. இதை கஷ்டம் என்று ஏன் சொல்கிறோம் என்றால், இதன் காரணமாக ஜாதகருக்கு நிறைய தொல்லைகளை சந்திக்க வேண்டி இருக்கும். யோகம் என்று ஏன் சொல்கிறோம் என்றால் இந்த கோள்களின் நிலை மற்றும் இந்த நிலை காரணமாக தோன்றும் கஷ்டங்கள் மற்றும் இந்த கஷ்டங்களுக்கு அப்பால் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நல்ல விஷயங்களை குறிப்பதற்காக யோகம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம். 

கால சர்ப்ப தோஷம் எந்த விதத்தில் மனிதர்களை பாதிக்கும்? 

  • படிப்பில் விக்னம் 
  • காரியத்தில் விக்னம் 
  • வேலை கிடைப்பதில் விக்னம் 
  • வேலையில் அதிருப்தி 
  • வேலை இழப்பு 
  • திருமணத்தில் விக்னம் 
  • மணவாழ்க்கையில் அதிருப்தி மற்றும் மணவாழ்க்கை தோல்வி அடைதல் 
  • விவாகரத்து அல்லது பிரிவினை 
  • குழந்தை பிறப்பதில் விக்னம் 
  • ஒரு காரியமும் நிறைவு அடையா பட்சத்தில் மன அதிருப்தி, நிம்மதி இழப்பு 

கிரஹங்களின் மற்ற நிலை முன்னிட்டு மேல் சொல்லப்பட்டவையின் தாக்கம் குறையவோ அல்லது மேலாகவோ இருக்கலாம். ஜோதிடர்களின் குறிப்பு என்ன வென்றால் 35 வயதிற்கப்புறம் இந்த தோஷத்தின் தாக்கம் முடிவு பெற்று நல்ல விஷயமும் சமாசாரமும் நடக்க ஆரம்பிக்கும். 

சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரமாகவும் ராஹு கேதுவிற்கு ப்ரீத்தி, சாந்தி செய்யவும் இந்த நாக பஞ்சமிக்கு மகத்துவம், முக்கியத்துவம் நமது மதத்தில், கலாசாரத்தில் கொடுக்க பட்டுள்ளது.

இந்த திதியில் பாம்பின் புற்றிற்கு பால் வார்ப்பார்கள். மஹா தேவருக்கு உபசார பூஜை, அர்ச்சனை, அபிஷேகம் போன்ற மரியாதைகள் ஆலயத்தில் நடைபெறும். சக்தியை பூஜிப்பவர்கள் ஆலயத்தில் அம்மனுக்கு வேண்டிய உபசார பூஜை, அபிஷேகம், அர்ச்சனை போன்ற மரியாதைகள் செய்து தேவியின் ஆசீர்வாதம், அருள் பெறுவார்கள். பாம்பின் புற்றில் பால் வார்க்கும் முறை சூர்ய அஸ்தம் முன் செய்து முடிக்க வேண்டும். 

நாக பஞ்சமி அன்று செய்யும் பூஜையும் பரிகாரமும் சர்ப்ப தோஷத்தின் தாக்கத்தை குறைக்கவும் நல்ல பலன்களை கொடுக்கவும் பெரிய அளவில் உதவி செய்கின்றன என்பதில் சந்தேகமில்லை. பலர் இந்த பரிகாரங்களினால் வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை சந்தித்து இருக்கிறார்கள். நீங்களும் நமது முன்னோர்கள் கற்று கொடுத்த சில நல்ல விதி முறைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நிறைவும் பெறலாம். 

நாக பஞ்சமியன்று கால சர்ப்ப யந்திரம், நவகிரஹ யந்திரம் போன்ற யந்திரங்களை ஸ்தாபித்து பூஜை செய்து அருள், வளம் பெறலாம். இது சர்ப்ப தோஷத்தின் தாக்கத்தை குறைக்கவும் உதவும். சிவ லிங்க பூஜை செய்தும் மஹாதேவரின் அருள் பெறலாம். ருத்திராக்ஷ மாலை அணிந்து ராகு கேதுவிற்கு பரிகாரம் செய்யலாம். 

ஆஸ்ட்ரோசேஜ் தளத்தில் உள்ள அங்காடியில் உங்களுக்கு வேண்டிய யந்திரங்களும், மாலைகளும், மற்ற பொருள்களும் கிடைக்கும். கால சர்ப்ப யந்திரம், மஹா ம்ருத்யுஞ்சய யந்திரம், பாதரசம் சிவ லிங்கம், ராஹு யந்திரம், கேது யந்திரம், எட்டு முகி ருத்ராக்ஷம், ஒன்பது முகி ருத்ராக்ஷம் இவற்றை உபயோகித்து இந்த தோஷ நிவர்த்தி செய்யுங்கள்.

லிங்கில் கிளிக் செய்து பயன் அடையுங்கள். 

மஹா தேவரிடம் சரண் அடையலாம், வாருங்கள்! 

நாக பஞ்சமியின் நல் வாழ்த்துக்கள்.

நன்றி. வணக்கம்.

Related Articles:

No comments:

Post a Comment