ஜனவரி 2017 ராசி பலன்


உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த ஜனவரி 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும்

மேஷம்


ராசிநாதன் செவ்வாய் பதினொன்றாம் வீட்டில் கோச்சாரம் செய்வதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள் மற்றும் மகிழ்ச்சியுடன் காரியத்தில் இறங்குவீர்கள். எதிர்பாராதவிதமாக லாபம் காண்பீர்கள். செய்யும் வேலையில் உயர்வு கட்டாயம். சக ஊழியர்களிடம் மற்றும் உச்ச அதிகாரிகளிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வது நல்லது. வேலை மாற்றம் எதிர்பார்த்து கொண்டிருப்போர்களுக்கு இது நல்ல சமயம், கட்டாயம் பிரமாதமான வாய்ப்பு கிடைக்கும். அஷ்டம சனி காரணமாக குடும்பத்திலோ அல்லது குழந்தைகளுக்கோ பாதிப்பு ஏற்படலாம். இது உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும். ராகுவின் ஐந்தாம் இட கோச்சாரம் பிள்ளைகளின் படிப்பு மற்றும் ஆரோக்கியம் பற்றிய விஷயங்களில் தொந்தரவு கொடுக்கும். இந்த சமயம் கார்யம் சம்பந்தமாக பிரயாணம் செய்ய நேரிடலாம். வ்யாபாரத்திலிருப்போர் நிதானமாக செயல் பட வேண்டிய நேரம். ஜாஸ்தி முதலீடு போடாமல் இருப்பது நன்மை தரும். கலைகள், இயந்திரங்கள், அழகு சம்பந்தமான விஷயங்களில் வேலை பார்ப்போர் லாபம் எதிர்பார்க்கலாம். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து போங்கள். நிம்மதியும் குதூகலமும் காண்பீர்கள். உடல் ஆரோகியத்தில் கவனம் தேவை. 

தாம்பரத்தில் அல்லது தங்கத்தில் ஆன வளையல் உபயோகித்தால் நன்மை தரும். 

ரிஷபம்


ராசிநாதன் சுக்கிரனின் பத்தாம் இட கோச்சாரம் காரணமாக நீங்கள் மிகவும் உல்லாசமும் உத்வேகமும் காண்பீர்கள். பணியில் உள்ளோர் மேல் அதிகாரிகளிடம் இருந்து புகழ் பெறுவார்கள். மாத கடைசியில் சனி எட்டாம் இடமான தனுசு ராசியில் பெயர்ச்சி செய்கிறார். கார்ய க்ஷேத்திரத்தில் மாற்றம் அல்லது வேலை சம்பந்தமாக பிரயாணம் செய்ய நேரிடலாம். குருவின் ஐந்தாம் சஞ்சாரம் எல்லா விதத்திலும் நன்மை தரும். செய்யும் வேலையை புத்துணர்வுடன் கவனமாக செய்து பாராட்டும் புகழும் பெறுவீர்கள். இரும்பு, ஆட்டோமொபைல், ஆடம்பரமான சாமான்கள், நூதன பொருட்கள் சம்பந்தமான வியாபாரிகள் பெருமளவில் வளர்ச்சி காண்பார்கள். குழந்தைகள் தங்கள் படிப்பில் வேகமாக முன்னேறுவார்கள்; புத்தி சாதுர்யத்தினால் பாராட்டும் பெறுவார்கள். ராகுவின் நான்காம் வீட்டு சஞ்சாரம் தாயின் உடல் ஆரோகியத்தை பாதிக்கலாம். ஏதாவது தீர்த்த யாத்திரை மேற்க்கொள்வீர்கள். சகோதரர்களும் மித்திரர்களும் பூரண ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும், ஆனால் பண விஷயத்தில், கொடுக்கல் வாங்கல் மற்றும் முதலீட்டில் கவனக்குறைவு பிரச்சினைகளை கிளப்பும். இந்த மாதம் உடல் நலமும், மன நிம்மதியும் தரும்.

கன்யா குழந்தைகளுக்கு தித்திப்பு வாங்கி கொடுங்கள். பெண்களிடம் அன்பாக இருங்கள். நலன் பெறுவீர்கள். 

மிதுனம்


இந்த மாதம் உங்கள் ராசிநாதன் புதன் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் உங்கள் உடலில் திடமும் உள்ளத்தில் நிம்மதியும் இருக்கும். வேலையிலும் மனதை ஒருமுகப்படுத்தி செயல் படுவீர்கள். மூன்றாம் வீட்டில் கோச்சாரம் செய்யும் ராஹுவினால் நிறைய தைர்யமும், வேலையில் கடினமாக உழைக்கும் திறனும் கிடைக்கும். குருவின் கோச்சாரம், செய்யும் பணியில் ஒரு நல்ல திருப்பத்தை தரும். சனியின் ஆறாம் வீட்டு சஞ்சாரம் எதிரிகளையும் விரோதிகளையம் அடங்க வைக்கும். மாணவர்கள் எந்த விதமான போட்டியிலும் வெற்றி காண்பார்கள். சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்து 11ஆம் வீட்டில் கோச்சாரம் செய்வது குழந்தைகளுக்கு நல்லது செய்யும். நீங்களும் மனா நிறைவும் பண நிறைவும் பெறுவீர்கள். மேல்படிப்பிற்கு வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு உண்டு. செவ்வாய் ஒன்பதில் இருப்பது தந்தையின் உடல் நலனுக்கு சற்று கெடுதல் செய்யலாம். ஜாக்கிரதையாக இருக்கவும். 

பச்சை நிற ஆடை அணியவும்; வெண்கல வளையல் மற்றும் பாத்திரம் உபயோகிக்கவும்.

கடகம்


ராகுவின் இரண்டாம் வீட்டு கோச்சாரம் பண தட்டுப்பாடும், பண விவகாரத்தில் பிரச்னைகளையும் உண்டு பண்ணும். சிலர் குடும்பத்தை விட்டு தூர செல்வார்கள். மூன்றாம் வீட்டில் உள்ள குருவினால் நினைக்க முடியாத கார்யங்கள் முடிக்க வாய்ப்பு உள்ளது. கூட பிறந்தோர் உடல் நிலை கவலை தரும். ஐந்தில் இருக்கும் சனி குழந்தைகலின் படிப்பில் தடங்கல் செய்யலாம். உங்கள் மன நிம்மதியையும் பாதிக்கும். வாழ்க்கை துணையுடன் ஒத்து போனால் ரொம்பவே நல்லது. வயறு சம்பந்த விஷயத்தில் கவனமாக இருந்தால் உங்களுக்கு நல்லது. தந்தையின் ஆரோக்கியம் சந்தோஷம் தரும். தாயின்உடல் நலம் சீராக இருக்காது. மாணவர்கள் மிகவும் கவனமாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டி வரும். அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் கேதுவும் செவ்வாயும் செய்யும் தொழிலில் பிரச்னைகள் உண்டு பண்ணுவார்கள்; ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம். மேல் அதிகாரிகளிடம் மற்றும் சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாக பழகவும். வரம்பு மீறாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது.

வீட்டில் அக்வேரியம் வைத்து மீன்களுக்கு தீனி போடுங்கள். வாழ்க்கையில் மங்களம் உண்டாகும்.

சிம்மம்


குருவின் இரண்டாவது இட சஞ்சாரம் குடும்பத்தில் சந்தோஷம் தரும். உற்றார் உறவினர்களின் சேர்க்கையினால் வாழ்க்கை மலரும். இனிமையான வாக்கின் மூலம் எல்லோர் மனதையும் கவருவீர்கள். உங்கள் கௌரவம், மதிப்பு நாளுக்கு நாள் ஓங்கும். ஜென்மத்தில் ராகு இருப்பதினால், ஆரோகியத்தில் கவனக்குறைவு பிரச்னைகள் கொண்டு வரும். சனியின் நான்காவது வீடு சஞ்சாரம் மன நிறைவை குறைக்கும் மற்றும் தாய் உடல் ஆரோகியத்தை கெடுக்கும். சூர்யன், புதன் சேர்க்கை புத்தி சாதூர்யத்தை வளர்க்க உதவும். ஐந்தாம் வீட்டில் இந்த புத-ஆதித்ய யோகம் தன்த்ரம், மன்த்ரம் மற்றும் கல்விக்கு மிகவும் உகந்தது. ஏழாவது வீட்டில் செவ்வாய், சுக்கிரன் கோச்சாரம் உத்யோகத்தில் நல்ல பலன் தரும். வியாபாரத்திலும், செய்யும் தொழிலிலும் கடுமையான உழைப்பினால் வேகமாக முன்னேறுவீர்கள். வேலை சம்பந்தமாக வெகு தூர பிரயாணம் செய்ய நேரிடும். ஏழாவதில் இருக்கும் கேது வாழ்க்கை துணையின் உடல் நிலையை பாதிக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது ரொம்பவே நல்லது.

சூர்ய நமஸ்காரம் செய்யவும்; சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிற கைக்குட்டை நல்ல பலன் தரும். 

கன்யா


ஜென்மத்தில் இருக்கும் குருவினால் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். மனம் ஸ்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஏதோ மனது பாரம் குறைந்தது போன்று இருக்கும். பன்னிரண்டில் கோச்சாரம் செய்யும் ராஹுவினால் வெளிநாட்டிலிருந்து லாபம் வர வாய்ப்பு இருக்கிறது. கூடவே தூக்கமின்மையும் கால் சம்பந்த பட்ட பிரச்னையும் சிலருக்கு வரலாம். மூன்றில் இருக்கும் சனியினால் பராக்கிரமமும் தைர்யமும் அதிகரிக்கும். நீங்கள் முன்பை விட அதிகம் உற்சாகமாகவும் உத்வேகமாகவும் காட்சி அளிப்பீர்கள். ஒரே சமயத்தில் பல கார்யங்கள் செய்து முடிக்கும் திறன் வைப்பீர்கள். உங்கள் தகப்பனாரின் ஆரோக்கிய சம்பந்தமான எந்த விஷயத்திலும் ஆஜாக்கிரதை ஆபத்தில் கொண்டு விடும். நாலில் இருக்கும் புத-சூர்யனின் சேர்க்கையினால் மனதில் அமைதியின்மை உணர்வீர்கள். வாழ்க்கை துணையின் அன்பும் உதவியும் மனப்பூர்வமாக கிடைக்கும். ஆறில் இருக்கும் செவ்வாய் கேது சேர்க்கை உங்களை பல மடங்கு உழைக்கவும் எடுத்த காரியத்தை முடிக்கும் தைர்யம் கொடுக்கும். எதிரிகள் தொந்தரவு கிடையாது. மாணவர்கள் எந்தவிதமான போட்டி தேர்விலும் கடினத்துடன் உற்சாகத்துடன் உழைத்து வெற்றி காண்பார்கள். 

ஏழை மாணவர்களுக்கு படிப்பு சம்பமான உதவி பண்ணுங்கள். சுப பலன் கிடைக்கும்.

துலாம்


கோச்சார சனி இரண்டாம் இடத்தில் இருந்து திடீர் பண வரவை குறிக்கிறார். பன்னிரண்டில் உள்ள குரு சஞ்சாரம் பாரிவாரக சந்தோஷத்தை மேம்படுத்தும். மாணவர்கள் படிப்பில் நல்ல பெயர் வாங்குவார்கள். ராகுவின் 11 ஆம் வீட்டு சஞ்சாரம் எல்லா விதத்திலும் லாபம் அளிக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் குமியும். சூர்யன்-புதன் 3 ஆம் இட கோச்சாரம் உங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தும். எடுத்த காரியத்தை குறைவில்லாமல் முடித்து கொடுப்பீர்கள். கூடப்பிறந்தோர் உதவியினால் உங்களுக்கு தனலாபம் கட்டாயம். உங்கள் வாழ்க்கைத்துணையின் மூலம் ஏதேனும் லாபமோ, நல்ல செய்தியோ கிடைக்கும். குழந்தைகளிடம் அன்பாக ஆனால் கண்டிப்பாகவும் இருந்தால் நல்லது. எல்லோருடனும் சம்பந்தங்கள் நன்றாக இருந்தாலும், இந்த சமயம் உங்கள் வாழ்க்கை துணைக்கு அசௌகரியம் ஏற்பலாம். உடனே கவனிக்கவும்.

பெண்மணிகளுக்கு பட்டு ஆடை, தாம்பூலம், பூ, பழம் மற்றும் மஞ்சள்-குங்குமம் கொடுத்து உபசரியுங்கள்.

வ்ருச்சிகம்


இந்த மாதம் ஜென்மத்தில் சனியின் சஞ்சாரம் நடக்கிறது. உடல் மற்றும் மன ஆரோகியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். குருவின் 11ஆம் வீட்டு கோச்சாரம், சகோதரர்களுக்கு நன்மை செய்யும். அவர்களது அன்பும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். உங்கள் புத்தி சாதூர்யத்தினால் நீங்கள் நிறைய சாதிப்பீர்கள்; மனதில் சந்தோஷம் நிலவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி காண்பீர்கள். சிலரின் பிள்ளைகள் சாதனை படைப்பார்கள். விவாக சம்பந்தத்தில் நிம்மதி நிலவும்; பரிவாரகத்தில் குதூகலம் காண்பீர்கள். வாழ்க்கை துணைக்கு சமூகத்தில் நல்ல பெயர், பாராட்டு கிடைக்கும். ராகுவின் 10 ஆம் வீட்டு சஞ்சாரம் செய்யும் பணியில் மாற்றம் மற்றும் எதிர்பாரா திருப்பம் கொண்டு வரும். கேதுவின் நான்காம் இட கோச்சாரம் இல்லறத்தில் மாற்றம் கொண்டு வரும். வேலை விஷயமாக வெளிநாட்டு பிரயாணம் கூடல் சிலர் செய்யலாம். தாயில் உடல் நலம் கவலை தரலாம். வீட்டிற்கு அழகு சாமான் வாங்கி அலங்காரம் செய்வீர்கள்.

மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய வேண்டாம்; தொந்தரவு கொடுக்க வேண்டாம். கெட்ட பழக்கங்களை அறவோடு நிறுத்தவும். சுகமாக இருப்பீர்கள்.

தனுசு


இந்த மாதம், ஜென்மத்தில் சூர்யன்-புதன் சேர்க்கை உங்களை வாழ்க்கையின் உச்சிக்கு கொண்டு போகும். செய்யும் வேலையில் புகழும் பாராட்டும் குமியும். மேல் அதிகாரிகள் உங்கள் வேலை செய்யும் திறனை பார்த்து பிரமித்து போவார்கள். உன்னதமான நிலை, ப்ரமோஷன், பண உயர்வு மற்றும் வேலையில் திருப்தி போன்ற நல்ல சமாச்சாரங்கள் நடக்கும். ஒன்பதில் இருக்கும் ராகு சஞ்சாரத்தினால் வெளியூர் பிரயாணம் செய்யலாம். இந்த சமயம் ஏதாவது தீர்த்த யாத்திரை அல்லது ஆன்மீகத்துடன் சம்பந்தப்பட்ட பிரயாணம் கூட நீங்கள் மேற்கொள்ளலாம். தந்தையின் உடல் ஆரோகியத்தில் கவனம் தேவை. ராசிநாதன் குருவின் பத்தாம் வீடு கோச்சாரம் உங்களுக்கு வேலையில் அபாரமான வெற்றியும், உயர்வும் கிடைக்க உதவும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். உடல் நிலைக்கு நல்ல கவனம் கொடுத்து ஆரோக்கியமாக இருப்பீர்கள். சனியின் 12 ஆம் வீட்டு சஞ்சாரம் கவலை தன்தாலும், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தியோ அல்லது லாபமோ கிட்ட வழி வகுக்கும். மூன்றாம் வீட்டில் இருக்கும் செவ்வாய்-கேது கோச்சாரம் சகோதர சம்பந்தங்களுக்கு பிரச்சனைகள் கொடுக்கலாம்.

சோம்பலை அறவோடு மறந்து வேலையில் இறங்குங்கள்; ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும்.

மகரம்


ராசிநாதன் சனியின் 11ஆம் வீட்டு கோச்சாரம் உங்களுக்கு நல்லது செய்யும். நீங்கள் ரொம்பவும் எனெர்ஜிடிக் மற்றும் பாஸிட்டிவ் ஆக உணர்வீர்கள். ஆரோகியத்திலும் சௌகர்யத்திலும் நிறைவு இருக்கும். இருந்தாலும் ராகுவின் 8ஆம் ஐடா சஞ்சாரம் எல்லா விதத்திலும் கவனமாக இருக்கும் படி வலியுறுத்துகிறது. வெகுதூர பிரயாணம் மேற்கொள்வீர்கள். தாயின் உடல் நிலை கவலை கொடுக்கும்; உடனே கவனியுங்கள். குருவின் 9ஆம் வீட்டு கோச்சாரம் உங்களின் பாக்கியத்தை பிரகாசிக்க வைக்கும். நீங்கள் சாகசமாக வேலையில் இறங்குவீர்கள். கூட பிறந்தோர்களுக்கும் இந்த வேளை நல்ல வாய்ப்புகள் கொண்டு வரும். நீங்கள் ஏதாவது தார்மீக அல்லது ஆன்மீக சங்கத்துடன் சேர்ந்து நல்ல பயனுள்ள கார்யம் செய்வீர்கள். சூர்யன்-புதன் சேர்க்கை 12இல் வேலை சம்பந்த வெகு தூர பிரயாணம் கொடுக்கும். இது உங்களுக்கு நன்மை தர வல்லது. கேது, செவ்வாய், சுக்ரனின் 2ஆம் இட சஞ்சாரம் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் பிரச்னைகள் கொண்டு வரலாம். 

சைவ உணவு உட்கொள்ளுங்கள். போதை தரும் பதார்த்தங்களிடம் இருந்து தூர இருங்கள்.

கும்பம்


ராசிநாதன் சனி 10ஆம் இடத்தில் இருக்கிறார்; கடினமாக உழைக்க வேண்டி வரும். ரொம்பவும் பாடு பட்டு எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். ஜென்மத்தில் கேது சுக்கிரன் சஞ்சாரம் தாய் அல்லது தந்தை ஆரோக்கியதை பாதிக்கும். உங்கள் உடல் நலன் மீதும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். சகோதரர்களின் பூர்ண சஹயோகம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆழமாக இயங்குவீர்கள். தார்மீக யாத்திரையும் பண்ணுவீர்கள். குருவின் 8ஆம் இட கோச்சாரம் ஆழ்ந்த மற்றும் மர்மமான ஆன்மீக விஷயத்தில் ஆய்வும். ஆர்வமும் மேம்படுத்தும். இந்த தருணத்தில் எதிர்பாராவிதமாக தன லாபம் பெறுவீர்கள். பாரிவாரகத்தில் திருப்தி, சந்தோசம் நிலவுவதற்கு நீங்கள் நன்றாக பிரயத்தனம் செய்வீர்கள். புதன்-சூர்யன் 11ஆம் இட சஞ்சாரம் ஷேர் மார்க்கெட்டில் மற்றும் ஸ்பெகுலேஷனில் திடீர் லாபத்தை கொடுக்கும். வியாபாரத்திலும் வளர்ச்சி காண்பீர்கள். ஆனால் பெரிய முதலீடு செய்யும் முன் நிதானமாக செயல் படவும். ராகுவின் 7ஆம் இட சஞ்சாரம் காரணமாக கவனக்குறைவிற்கு இடம் இல்லை.

மற்றவர்களுக்கு எந்த வித தொந்தரவும் கொடுக்காதீர்கள். அன்பாகவும், நியாயமாகவும் செயல் படுங்கள். ஏழை எளியோர்களுக்கு தான தர்மம் செய்யுங்கள்.

மீனம்


ராசிநாதன் குருவின் கோச்சாரம் 7ஆம் பாவத்திலும், சனியின் சஞ்சாரம் 9ஆம் வீட்டிலும் இருப்பதனால், செய்யும் வேலையில் குறைந்த உழைப்புடன் நிறைய பாராட்டுகிட்டும். ஸ்நேகிதர்களிடமும் சகோதரர்களிடமிருந்தும் நிறைய ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகள் மேல் உங்கள் கை ஓங்கும், அதனால் அவர்கள் பணிந்து போவார்கள். சனியின் கோச்சாரம் தகப்பனாரின் ஆரோகியத்தை பாதிக்கலாம். ராகுவின் 6ஆம் இட சஞ்சாரத்தினால் போட்டி தேர்வுக்காக தயார் செய்யும் மாணவர்கள் பெரிய அளவில் சாதனை செய்து வெற்றி பெறுவார்கள். தைர்யமாகவும் சாகசமாகவும் வாழ்க்கையை சந்திப்பீர்கள். குருவின் பார்வை ஜென்மத்தில் இருப்பதால், உங்கள் புலனும், அறிவும், திறமையும் பளிச்சிடும். வாழ்க்கைத்துணையுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்துவீர்கள். வேலை சம்பந்தமாக சிலர் தூர பயணம் மேற்கொள்வார்கள். சூர்யன்-புதன் 10ஆம் இடத்தில் கோச்சாரம் செய்வதால், வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர், பாராட்டு, புகழ், மதிப்பு எல்லாம் கிடைக்கும். தாயில் உடல் நலத்தில் அக்கறை தேவை. கேது-செவ்வாய்-சுக்கிரன் 12இல் இருப்பதனால், நித்திரையின்மையினால் பாதிக்கப்படலாம்.

உங்களால் முடிந்த உதவி எல்லோருக்கும் செய்யுங்கள். பிறர் வாழ்க்கையில் சுப காரியத்தில் பணத்தாலும், சரீரத்தாலும், மனத்தாலும் நல்லது செய்யவும். உங்கள் வாழ்க்கையில் நன்மை பன்மடங்கு வரும்.
Read More »

டிஸெம்பர் 2016 ராசி பலன்

மேஷம் 


குடும்பத்தினருடன், சொல்ல போனால் தாயுடன், உறவு இம்ப்ரூவ் பண்ணுங்கள். எல்லோரையும் அணைத்து கொண்டு போங்கள். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். குழந்தைகள் தொந்தரவு ஜாஸ்தி ஆக இருக்கும். கோவம் படாமல் பார்த்து டீல் செய்யுங்கள். காதல் விஷயத்திற்கு நல்ல நேரம். வேலையில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். உங்களுடைய பிளானிங் நூதனமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். பண வரவு ரொம்ப நன்றாக இல்லாவிட்டாலும் சேமிப்பு நன்றாக இருக்கும். வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், ஆழ்ந்த ஈடுபாடு, உழைப்புடன் நீங்கள் டார்கெட்டை அசீவ் செய்வீர்கள். இருந்தாலும் வேளையில் ஸ்ட்ரெஸ் அதிகம் ஆவதிகள் மனதில் திருப்தி இருக்காது.அரச மரத்திற்கு தீபம் ஏற்றி ஜலம் அற்பணியுங்கள். ராஹு, சனி, செவ்வாய் பரிகாரம் மிகவும் நன்மையுடையடாக இருக்கும்.

ரிஷபம் 


இந்த மாதம் பேரின்பம், ஆனந்தம், அபிவ்ருத்தி நிறைந்ததாக இருக்கும். குருவின் நல்ல பார்வை இருக்கிறதால் அதிர்ஷ்டம், செல்வம் உங்கள் பக்கம். நண்பர்கள், உற்றார் உறவினர்களிடம் சம்பந்தங்கள் சிறப்பாக இருக்கும். உங்கள் யோசனை, கருத்துகளை வரவேற்பார்கள். நீங்கள் நிரம்பவும் ஆப்டிமிஸ்டிக் ஆக இருப்பீர்கள். ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்கிறதிற்கு முன்பு நன்றாக யோசிக்கவும். ப்ராபர்ட்டி, வீடு, நன்றாக யோசித்து முடிவெடுக்கவும். வேலை செய்யும் இடத்தில் கொலீக்ஸ் ரொம்பவே சப்போர்டிவ் ஆக இருப்பார்கள். ஆனால் மேலதிகாரிகள் பக்கத்திலிருந்து பிரச்சனை கட்டாயம் இருக்கும். ஆனால் கல்யாணம் செய்ய விரும்புவோர்களுக்கு இது ரொம்பவே நல்ல நேரம். 

செவ்வாய் கிரஹத்திற்கு பரிகாரம் செய்யுங்கள். அங்காரகனுக்கு ஸ்லோகம் படியுங்கள். பண விரயம் குறையும்.

மிதுனம் 


உங்கள் காரியத்தை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். ஆனால் செலவுகள் மீது ஒரு கண் வைத்து கொள்ளவும். ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்வதற்கு இது உகந்த மான நேரம். அட்மினிஸ்ட்ரேடிவ் விவரங்களில் உங்கள் ஆற்றல் பளிச்சிடும். வேலை செய்யும் இடத்தில் யாரிடமும் கடுமையாக பேச வேண்டாம், எல்லோரிடமும் நன்றாக பழகவும். குடும்பத்திற்கு நிறைய டைம் கொடுப்பீர்கள். தாம்பத்திய உறவில் ஜாக்கிரதையாக விஷயத்தை கையாளவும். வாதம், விவாதம் இரண்டிற்கும் இடம் கொடுக்க வேண்டாம். குழந்தைகள் விஷயத்தில் கொஞ்சம் அண்டர்ஸ்டேண்ட்டிங் தேவைப்படும். நிலைமையை நிதானமாக மேனேஜ் செய்து அவர்களுக்கு புரிய வையுங்கள்.பண வரவு சுமாராக இருக்கும். செய்கிற வேலையில் கவனம் கொடுத்து செய்யுங்கள். உங்கள் வியாபாரம் விஷயமாக நீங்கள் அனுபவமுள்ளவர்களை சந்திப்பீர்கள். உங்கள் செலவுகள் குறையும். ஹெல்த் விஷயத்திற்கு இது சாதாரணமான சமயம். வேலையில் ஸ்ட்ரெஸ் எடுத்துக்காமல் வொர்க் செய்யுங்கள். 

சனி யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜை, ஆராதனை செய்யுங்கள்.

கடகம் 


சில தடங்கல்கள் உங்கள் கார்யக்ஷேத்திரத்தில் வரும். உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் அதிகமாக நீங்கள் உழைக்க வேண்டி வரும். உங்கள் பிளான், சின்னதோ பெரியதோ, இந்த மாதம் நிறைவு அடையும். இந்த மாதம் எல்லா விதத்திலும் மிகவும் சுபமாக முடியும். உங்கள் கடினமான உழைப்பிற்கு உங்கள் வெற்றி கண்ணாடி மாதிரி வேலை செய்யும். அமைதியாகவும், மௌனமாகவும் இருந்து நீங்கள் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். லக் உங்கள் பக்கம் இருந்தாலும், ஹார்ட் வொர்க் செய்கிரதை விட மாட்டீர்கள். நண்பர்கள், குடும்பத்தினர்கள் ஆதரவு இருந்தாலும் மனதில் ப்ரேஷேர் இருக்கத்தான் செய்யும்.குழந்தை வேண்டியவர்களுக்கு இது நல்ல சமயம். தாம்பத்திய உறவிலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் கூட வேலை செய்வோரின் பாலிடிக்ஸ் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், பார்த்து சமாளியுங்கள். சிலர் தார்மீகம், ஆன்மீகம் போன்றவற்றில் இன்டெரெஸ்ட் எடுத்து கொள்வார்கள். குடும்பத்தில் சந்தோஷம், அமைதி காக்க முயற்சி செயுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. 

கேது, செவ்வாய், சனி பரிகாரம் செய்யுங்கள். எல்லா விஷயத்திலும் நன்மை தரும்.

சிம்மம் 


இந்த மாதம் லைக் மைன்டெட் மனிதர்களுடன் காரியமும் சம்பந்தமும் செய்ய வேண்டி வரும். எவ்வளவு தான் நிலைமை மோசமாக இருந்தாலும், பாசிடிவ் ஆக திங்க் செய்யுங்கள், இருங்கள். பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்கிறது ரொம்ப அவசியம். அதை மறக்காதீர்கள். ப்ராப்பர்ட்டி விஷயத்தில் இன்வெஸ்ட்மென்ட் வேண்டாம். காதல் விவகாரம் களிப்பு தரும். தாயின் ஆரோகியதில் கவனம் தேவை. கோவத்தை குறைத்து கொள்ளவும். தர்க்கம், விவாதம் அவாய்ட் செய்யுங்கள். கடன் எந்த ரூபத்திலும் வேண்டவே வேண்டாம். புதிய முயற்சியில் நல்லதொரு திருப்பம் இருக்கிறது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு கட்டாயம் கிடைக்கும். உடல் ஆரோகியதில் மிக அதிகமாக கவனம் தேவை. 

பைரவருக்கு பூஜை ஆராதனை செய்யுங்கள். இது ஒரு பிரமாதமான ராஹு பரிகாரம்.

கன்னி

 

இந்த மாதம் மிஸ்ர பலன் கிடைக்கும். உங்கள் புத்தியை உபயோகம் செய்யது முன்னேற்றம் காணுங்கள். எதிரிகள் பிரச்சனை கிளம்புவார்கள். ஆனால் லக் உங்கள் பக்கம். அதனால் தைர்யமாக, சந்தோஷமாக இருங்கள். வீடு, மணை விஷயம் இந்த மாதம் வேண்டாம். செய்யும் வேலையை கவனமாக செய்யுங்கள். இல்லாவிட்டால் பிரச்னை கட்டாயம் வரும். அமைதி, எல்லோரின் அன்பு இது தான் முக்கியம் என்று அறியுங்கள்.அக்கம் பக்கத்தவர்களுடன் ஜாக்கிரதையாக இருக்கவும். கேளிக்கை, குதூகலம் என்று லைஃப் என்ஜாய் செய்யுங்கள். பேசும் முறையில் நிதானம் தேவை. ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிக்கவும். வீட்டிலோ வேலை செய்யும் இடத்திலோ கருத்து வேற்றுமை இருந்தால், தர்க்கம் வேண்டாம். மன நிம்மதிக்கு ஆன்மீகத்தில் இறங்குங்கள். 

ஒரு முகி ருத்திராக்ஷம் அணியுங்கள். செல்ல விதத்திலும் நன்மை தரும்.

துலா 


ரொம்பவும் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய மாதம் இது. மன வேதனை, டென்ஷன் என்று பல விதமாக அமைதியின்மை இருக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். காதல் ஜோடிகள் கண்ணாம்பூச்சி விளையாடாமல் புரிந்து கொண்டு நடக்கவும். லைஃப் பார்ட்னருடன் அன்பாகவும் மரியாதையாகவும் இருக்கவும். சனி குரு கோசாரம் சரியாக இல்லாததால், வாழ்க்கை வெறுமையாக இருக்கிறமாதிரி இருக்கும். போக போக சரியாகும். எக்ஸ்ட்ரா முயற்சி செய்து பேலன்ஸ் பண்ணுங்கள். 

மூன்று முகி ருத்திராக்ஷம் அணியுங்கள். நல்லது செய்யும்.

விருச்சிகம் 


திடீர் என்று சில விஷயங்கள் நடக்கும். லக் மீது மட்டும் நம்பிக்கை வைக்காமல், உங்கள் கடின உழைப்பிற்கும் மதிப்பு கொடுங்கள். மனதிற்கு பிடிக்காமல் சில விஷயங்கள் நடக்கலாம், ஆனாலும் உங்கள் வில் பவரினால் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு சரி செய்வீர்கள். வேளையில் மாற்றமோ உயர்வோ கடினமாக வொர்க் செய்தபிறகு வரும். வியாபாரிகளுக்கு நல்ல நேரம். கடன் வாங்க நல்ல நேரம் இல்லை.பண வரவும் இருக்கும், செலவும் இருக்கும். எதிரிகள் தொந்தரவு இருக்காது. ஒரு நிலை இல்லாமல் தவிப்பீர்கள். எந்த விஷயத்திலும் ஸ்ட்ரெஸ் எடுத்துக்க வேண்டாம். டீச்சிங், மெடிக்கல், பேங்கிங் செக்டரில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். 

சனி பரிகாரம், ஆஞ்சநேயர் பூஜை, குல குருவிற்கு மரியாதை மிகவும் நன்மை செய்யும்.

தனுசு 


தடங்கல் நிறைத்த மாதம். ஆனால் தன்னம்பிக்கையுடன், கடின உழைப்புடன் முன்னேறுவீர்கள். லாங் டேர்ம் பிளானிங் செய்தால் நல்லது. வேலை மாற்றம், டிரான்ஸ்ஃபர் விஷயங்களுக்காக வைட் செய்தவர்களுக்கு கூட் நியூஸ். உங்கள் ஸ்ரத்தை, நேர்மை, நல்ல குணத்திற்கு எல்லாம் நல்ல படியாக மாறும். தாம்பத்திய உறவில் அன்பு, பரிவு, புரிந்துகொள்ளுதல் இருக்கும். காதல் ஜோடிகள் என்ஜாய் செய்யலாம். டேட்டிங் விஷயத்திற்கும் நல்ல டைம்.பரிவாரக சுகம், அன்பு நிறைய இருக்கு, கிடைக்கவும் செய்யும். வேலையில் அந்தஸ்து உயரும், பண வருவாய் அதிகரிக்கும். 

கட்டுப்பாடு மிகவும் அவசியம். சனிக்கு என்ணை தீபம் ஏற்றுங்கள்.

மகரம் 


பரிவாராக சுகம், வேலையில் நிம்மதி, உற்றார் உறவினர் நட்பு, நண்பர்களின் ஆதரவு எல்லாம் வாழ்க்கையில் ஒரே இன்ப மயம், மகர ராசிகாரர்களே. பண வரவு நன்றாக இருக்கும். மாணவர்கள் எக்ஸ்ட்ரா எஃப்போர்ட்ஸ் கொடுக்க வேண்டி வரும். பணிவாகவும், மரியாதையாகவும் எல்லோரிடமும் இருந்தால், லைஃப் ரொம்ப ஸ்மூத் ஆக இருக்கும். உங்கள் ஆற்றல் பளிச்சிடும், திறமை அதிகரிக்கும், புத்தி கூர்மையாகும், வாக்கு சாதுர்யம், பேச்சில் மதுரம் இருக்கும். இது உங்களுக்கு ரொம்பவே நல்லது செய்யும். லாபம், பண வருவாய் அதிகரிக்கும். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். 

காயத்ரி மந்திரம் படியுங்கள். காலையில் விஷ்ணு பூஜை செய்யுங்கள்.

கும்பம் 


நீங்கள் நினைத்ததற்கு விஷயம் வேறு விதமாக மாறலாம். லக் மட்டும் போறாது. கடினமாக, மும்முரமாக உழைப்பு தேவை. வொர்க் ப்லேஸிலும் குடும்பத்திலும் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்க தான் செய்யும். பார்த்து கொள்ளுங்கள். நிதானமாக, அமைதியாக விஷயத்தை சால்வ் செய்யுங்கள். பண வருவாய் அதிகரிக்கும். கடனும் வாங்குவீர்கள். சேமிக்கவும் செய்வீர்கள். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கவும். ப்ரமோஷன் கட்டாயம் கிடைக்கும். குடும்பத்தில் எல்லோரும் கொஆப்ரெட் செய்வார்கள். ஸ்ட்ரெஸ் எடுத்துக்கொள்ளவேண்டாம். 

செவ்வாய் கிழமை விரதம் மேற்கொள்ளவும். தான, தர்ம கார்யங்கள் மூலம் பரிகாரம் செய்யவும்.

மீனம் 


வேலை செய்யும் இடத்தில், உங்கள் திறமை ஓங்கும், எல்லோரூம் மதிப்பார்கள், போற்றுவார்கள். கலை,சங்கீதம், இலக்கியம் போன்ற விஷயங்களில் உங்கள் ஆர்வம் நிறைய இருக்கும். சிலர் உங்கள் மீது பொறாமை கொண்டு பழி சுமத்துவார்கள். ஜாக்கிரதியாகவும் டைராயமாகவும் விஷயத்தை ஹேன்டில் செய்யவும். காதல் விவகாரத்தில் ப்ராப்ளேம் வராமல் பார்த்துக்கணும். இன்வெஸ்ட் பண்ணுகிறதிற்கு நல்ல நேரம் இல்லை. வெளி மனுஷர்கள் தலையீடு இருந்தால், ரொம்பவே மெதுவாக ஆனால் கண்டிப்பாக அவர்களிடம் சொல்லவும். நிறைய பணம் சம்பாதிப்பீர்கள்,சேமிப்பீர்கள். தான தர்மத்தில் செலவும் செய்வீர்கள். உடல் ஆரோகியதில் கவனம் தேவை. 

சனீஸ்வரனுக்கு ப்ரீதீ செய்யுங்கள். என்னை விளக்கு சனி கிழமை தோறும் அரச மரத்திற்கடியில் ஏற்றவும்.
Read More »