செப்டம்பர் 2016 ராசி பலன்

உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த செப்டம்பர் 2016 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும்


மேஷம்


குரு பகவான் ஆறாவது வீட்டிலும், சனி பகவான் எட்டாவது வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றன. மாதத்தின் முற்பகுதியில் க்ரஹணம் ஐந்தாவது வீட்டில் நடப்பதால், உங்கள் ஆரோக்கியதிற்கும், குழந்தைகளின் நலனுக்கும் நல்லது இல்லை. மன உளைச்சல், டென்ஷன் அதிகமாக இருக்கும் பண விரயம், தாம்பத்திய உறவில் க்லேஷம், குடும்ப உறவில் குழப்பம், குழந்தைகள் பக்கத்திலிருந்து பிடிவாதம், எதிர்ப்பு என்று நிறைய சிக்கல்கள் இருகின்றன. மாதத்தின் பிற்பகுதியில் ராசி நாதன் செவ்வாயும் சுக்ரனும் சிறிது பலம் பெற்று கொஞ்சம் ரிலீஃப் கொடுப்பார்கள். பொறுமையாக இருந்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். கோவத்தில் எந்த டிஸிஷனும் எடுக்காதீர்கள்.

சனி குருவிற்கு ப்ரீத்தி செய்யுங்கள். அன்ன தானம், தீப தானம் , பெரியோர்களின் ஆசீர்வாதம் நன்மை தரும். சரஸ்வதி தேவிக்கு ஆராதனை செய்யுங்கள்.

ரிஷபம்


குரு பகவான் ஐந்தில் நல்ல கண்டிஷனில் இருந்தால் கூட, சிம்மத்தில் நடக்கிற கிரஹணத்தினால் வீட்டில் குழப்பம், பணி செய்யும் இடத்தில க்லேஷம் மேலதிகாரியின் அதிருப்தி போன்ற விஷயங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். பெரிய தொகை கடனாக வாங்காதீர்கள். எந்த முடிவும் கோவத்திலோ ஆத்திரத்திலோ எடுக்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில மிக கவனமாக இருங்கள். யாரோடும் அதிகமாக பேச்சு-வார்த்தை வைத்து கொள்ளவேண்டாம், மிஸ்-கம்யூநிகேஷென் ஆக சான்ஸ் ஜாஸ்தி இருக்கிறது.குடும்பத்தில் சில சமயம் நிம்மதி நிலவினாலும் உங்களுக்கு திருப்தி இருக்காது மனது அலை பாயும்.உங்கள் லக்கில் மட்டும் டிபென்ட் ஆகாமல், உங்கள் அனுபவத்தையும், அனுமானத்தையும் பிரயோகத்தில் கொண்டு வாருங்கள்.

மஹா விஷ்ணுவிற்கும் மஹா லட்சுமிக்கும் பூஜை செய்யுங்கள். உங்கள் விருப்பம் போல் கோவிலில் அரிசி, நெய், வெல்லம், பருப்பு வகையறாக்கள், தேங்காய் , ஊதுபத்தி, தீபம், தூபம், கற்பூரம் போன்றவைகளை தானம் செய்யுங்கள். ரேஷ் டிரைவிங் அவாய்ட் செய்யுங்கள்.

மிதுனம்


வேலை பார்க்கும் இடத்தில் கோவத்தை குறையுங்கள். தைரியமாகவும் சாதுர்யமாகவும் வேலையில் உள்ள தடங்கல்களை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வியாபாரத்தில் கடன் சம்பந்தமான விஷயங்களை பார்த்து ஹேன்டில் செய்யுங்கள். பண வருவாய், லாபம் அதிகரிக்கும். ஆனால் செலவுகளும் படு வேகமாக வ்ருத்தி அடையும். அதனால், எவ்வளவு சேமிப்பு செய்ய வேண்டுமோ, செய்யுங்கள். இன்பக்கேளிக்கையிலும் பொழுதுபோக்கிலும் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நம்பர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பு கொடுக்கும். காதல் விவகாரத்தில் யோசித்து முடிவு எடுங்கள். நீங்கள் சொல்லும் சொல் ரொம்ப கடினமாகவும் முள் மாதிரி குத்தும். உங்கள் உறவிலும், நட்பிலும் இது ப்ராப்ளேம் உண்டு பண்ணலாம். பிஸினஸுக்கு இது உகந்த நேரம். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்திலும், உங்கள் குழந்தையின் நலனிலும் அக்கறை காட்டுங்கள்.

அஷ்டதாதுவில் (எட்டு உலோக கலவை) தயாரித்த ப்ரேஸ்லட் போட்டுக்கொள்ளுங்கள். ராஹுவுக்கு இது தான் சரியான பரிகாரம்.

கடகம்


இந்த மாதம் முழுவதும் நீங்கள் எனெர்ஜிடிக் ஆக இருப்பீர்கள். எந்தவிதமான விவாதத்தையும் அறவோடு தவிர்க்கவும். பார்ட்னெர்ஷிப்பில் லாபம் உண்டு. முன் செய்த வேலையின் பலன் இப்பொழுது கிடைக்கும். கார்யக்ஷேத்திரத்தில் பொறுப்புகள் ஜாஸ்தி ஆகும் விருத்தியும் உண்டாகும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும். குடும்ப நலனில் அக்கறை காட்டுங்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் கவலை தரும். உறவுகளில் டென்ஷேன் நிலவும். பார்த்து மேனேஜ் செய்தால் நிம்மதி உங்களுக்கு தான்.

வியாபாரத்தில் லாபம் நிச்சயம், ஆனால் பெரும்பாடுபட்ட பின்பு தான். தைரியமாக சில முடிவுகள் எடுத்தால், உங்கள் அந்தஸ்தில் நல்ல மாற்றம் காணலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் வேண்டும். ஹெல்த் விஷயத்தில் எதுக்கும் ஹார்ட் செக்-அப் செய்து பாருங்கள். மற்றபடி அதிகம் கவலை பட வேண்டாம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், நீங்கள் உங்கள் மற்ற வாழ்க்கை ஸமாஜாராம் பிரச்னையை சமாளிக்க முடியும்.

கணேஷ சங்கு வையுங்கள். உங்கள் பாரிவாராக, சமூக, வர்த்தக, மானசீக, ஆரோக்கிய விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

ஸிம்ஹம்


இந்த மாதம் உங்கள் குடும்ப சம்பந்தங்கள், பிசினெஸ் பார்ட்னெர்ஷிப் பாதை மேலும் கீழும் செல்லும். வேலை செய்யும் இடத்தில் ஆதரவும் சஹயோகம் கிடைக்கும். நீங்கள் பேசும் தோரணையை கொஞ்சம் மெதுவாகவும் வார்த்தைகளை இனிப்பாகவும் வைத்துக்கொண்டீர்களானால், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடங்கல்களை நீங்கள் குறைக்கலாம். இது நீங்கள் வியாபாரத்தை விரிவு செய்ய உதவியாக இருக்கும். குடும்ப உறவுகளில் உங்கள் அன்பும் வளைந்து கொடுக்கிற தன்மையும் தான் உறவுகளை பாதுகாக்க உதவும். தன்னம்பிக்கையோடு உங்கள் பென்டிங் வேலைகளை செய்து முடியுங்கள். எல்லா விஷயத்திலும் பாஸிடிவ் ஆக யோசியுங்கள். அனுபவமுள்ளவர்களின் உதவி எல்லா விதத்திலும் நல்லது செய்யும். வரவும் செலவும் சரியாக இருக்கும். உங்கள் கோவம், ஆத்திரம் எல்லாவற்றையும் குறைத்து கொண்டால் நிலைமை கட்டாயம் மாறும். வொர்க்-லைஃப் பேலன்ஸ் மெய்ன்டேன் பண்ணனும்.

சர்வ கார்ய சித்தி யந்திரம் வீட்டு வட-கிழக்கு திசையை பார்த்து வைத்து பூஜை செய்யுங்கள்.

கன்னி


நிலைமை கொஞ்சம் செட்டில் இல்லாத மாதிரி இருக்கும். உங்களை நீங்களே அனலைஸ் செய்து, நிலைமையை வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மாற்ற முயலுங்கள். உங்கள் புத்தி கூர்மையும் வாக்கு சாதூர்யமும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு நல்வழி காட்டும். பண வரவு பன்மடங்கு உயரும். நிறைய பொறுப்பும் கடினமாக உழைப்பும் மேல்கொள்ளுவீர்கள். தாம்பத்திய உறவில் உல்லாசமும் அனுசரித்து போகும் குணமும் நிறைந்து இருக்கும். சிலருக்கு வாழ்க்கையில் காதல் மலரும். சிலர் மண வாழ்க்கையில் கால் எடுத்து வைப்பார்கள். ஆன்மீகம், தார்மீகம் போன்ற விஷயங்களில் உங்கள் கவனம் திரும்பும், ஆர்வம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பண வரவும் பதவி உயர்வும் அதிகரிக்கும். இத்தனை நாள் பிளான் செய்தவை இப்பொழுது நடக்கும். உங்கள் மொத்த கான்செண்ட்ரேஷென் செய்யும் வேலையில் இருக்கிறது ரொம்பவும் சிறப்பானது. இந்த குணம் உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு போகும். ஹெல்த் விஷயத்தில் நீங்கள் சற்று நிதானமாகவும் கவனமாகவும் இருக்கணும். நெல்லிக்காய் கலந்த ஆயுர்வேத மருந்து உங்களுக்கு நல்லது செய்யும்.

கௌரி ஷங்கர ருத்திராக்ஷம் அணியலாம். குழந்தை ஆசை உள்ளவர்கள் சந்தான கோபால மந்திரம் ஜபிக்கலாம்.

துலா


இந்த மாதம் சொந்த தொழில் பிசினெஸ் செய்பவர்களுக்கு நல்ல நேரம். லக் உங்கள் பக்கம் இருக்கிறது, உங்களுக்கு கூடுதலான நன்மையும் கிடைக்கும். ஆனால் எந்த விஷயத்திலும் கவலை படாமல் காரியமே கண்ணாக இருங்கள். பேச்சில் கட்டுப்பாடு வேண்டும். வறட்டு கௌரவம் பார்க்காதீர்கள். இல்லையென்றால் வேலை செய்யும் இடத்தில் உறவுகளில் கசப்பு தன்மை இருக்கும். சில நாள்கள் கடுமையான டென்ஷன் நிறைந்ததாக இருக்கும். குழந்தைகளிடம் அன்பாக இருங்கள். உற்றார் உறவினர், குடும்பத்தினரிடம் மென்மையாக பழகுங்கள், கருத்து வேறுபாடு இருந்தால் பார்த்து மேனேஜ் பண்ணவும். வாதம், விவாதம் இதிலிருந்து தூர ஓடவும். உடல் ஆரோக்கியம் இந்த மாதம் மிகவும் முக்கியம். எலும்பு நோய், கண் நோய் போன்றவற்றிலிருந்து தப்பவும்.

யோக அப்யாசம், தியானம் முதலியவை நிம்மதி கொடுக்கும். ஃப்ங்க் ஷ்வே, வாஸ்து போன்றவற்றினால், வீட்டில் நல்ல வைப்ரேஷன்ஸ் கொண்டு வாருங்கள்.

விருச்சிகம்


இந்த மாதம் நீங்கள் புதிய முயற்சியில் இறங்குவீர்கள். கலை, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் பிரபலம் ஆவீர்கள். உங்கள் அந்தஸ்து சமூகத்தில் பன்மடங்கு உயரும். கம்பியூட்டர், அழகு சாதனங்கள், வஸ்திரம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். ஆனால் குடும்பத்தில் கொஞ்சம் குழப்பம் நிலவும். குழந்தைகள் விவகாரம் மனதில் சஞ்சலம் உண்டு பண்ணும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் கவலை தரும். பிரயாணம் செய்கிற பொழுது நிதானமாக செயல் படவும். உங்கள் பர்சனல் உடைமைகளின் மீது கவனமாக இருங்கள். பாரிவாரிக சுகம் இப்ப இல்லை. மனம் அலைபாயும். உடல் உபாதைகளும் கூடவே இருக்கும். ஜாக்கிரதையாக கையாளுங்கள். வீண் சண்டை, உட் பூசல்களிலிருந்து தூர இருங்கள். மாத கடைசியில் பண வருவாய் மிகவும் பலமாக இருக்கும். ப்ரமோஷன் பற்றின விஷயங்கள் சூடு பிடிக்கும். இன்வெஸ்ட்மென்ட் செய்கிரத்திற்கு இது நல்ல நேரம்.

சனி கோவிலில் எண்ணெய், எள், உளுத்தம் பருப்பு, கருப்பு வண்ண வஸ்திரம் போன்றவை தானம் செய்யவும். ஏழை எளியோர்களுக்கு அன்ன தானம் பண்ணுங்கள். சுந்தர காண்டம் படிக்கலாம். காகத்திற்கு ஒரு வாய் எடுத்து வைத்து பின்பு சாப்பிடவும்.

தனுசு

உங்கள் கார்ய க்ஷேத்ரத்தில் முன்னேறுகிறதிற்கு தைர்யமாக கால் எடுத்து வையுங்கள். தன லாபம், திருப்தி உண்டாகும். வொர்க் லோட் அதிகரித்தாலும், கூடவே பண வருவாயும் ஜாஸ்தி ஆகும். உங்கள் தீர்மானங்களை ஸ்மார்ட்டாக ஆனால் உடனே எடுங்கள். பெரியோர்களின் ஆதரவு இருக்கிறது. குடும்பத்தில் கிலேசம் உண்டாகும். பார்த்து மேனேஜ் செய்யவும். எல்லோரிடமும் ஜாக்கிரதையாக பேசவும், பழகவும். செலவுகளில் மீது ஒரு கண் வையுங்கள். வாகனம், தங்கம், வீடு, மனை போன்ற விஷயங்களுக்கு இப்பொழு நல்ல நேரம். ரியல் எஸ்டேட் பிசினெஸில் இருக்கிறவர்கள் வளம் காண்பார்கள். வேலை பொறுப்புகள் காரணமாக ஸ்ட்ரெஸ் எடுத்துக்க வேண்டாம். நன்றாக காய்கறி பழவகையறாக்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளவும், ஜங்க் ஃபுட் கட்டாயம் அவாய்ட் பண்ணுங்கள் .

வீட்டில் நித்திய பூஜை ஆராதனை செய்யுங்கள். வேண்டாத மரச்சாமான்கள் தலையை சுற்றி தூர எறியுங்கள்.

மகரம்


பிசினெஸ் செய்கிறவர்களுக்கு இது உகந்த நேரம். எதிர் பாராத விதமாக லாபம் தேடி வரும். குடும்ப, தாம்பத்திய உறவுகளில் அன்பு, அரவணைப்பு இருக்கும். கோவம், ஆவேசம் போன்ற குணங்களை அறவே ஒழித்திடுங்கள். அலைபாயும் மனதை கட்டுப்பாட்டில் வையுங்கள். உங்கள் விருப்பம் போல் சில விஷயங்கள், வீட்டு மனுஷர்கள் நடக்க வில்லை என்றால் கவலை வேண்டாம். சாமர்த்தியமாக டீல் செய்யுங்கள். ஈகோவை விட்டு விட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். ப்ரொபேர்ட்டி சம்பந்த விஷயங்களில் டாகுமெண்ட்ஸ் சரியாக உள்ளதா என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை பாருங்கள். எதிரிகள், முன் பின் தெரியாதவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தால் நன்றாக இருக்கும்.

ஆஞ்சநேயரை முழுமனதாக பூஜியுங்கள். உங்கள் மிகவும் நல்லது.

கும்பம்


இந்த மாதம் மீடியா, ஆர்ட்ஸ் சம்பந்த விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கும். கொஞ்சம் டைம் எடுத்து கொண்டு ஏழை எளியோர்களுக்கு சேவை, தானம் செய்யுங்கள். உங்கள் தன்னம்பிக்கை பளிச்சிடும். மனதை கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள். உணர்ச்சி வசப்படாமல் யோசியுங்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவணும் என்றால், எல்லோரையும் சுற்றுலா/பிரயாணம் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். வரவு செலவு சமமாக இருக்கும். புதிதாக கார்யம் ஒன்றும் ஆரம்பிக்க வேண்டாம். உங்கள் கடினமான உழைப்பிற்கு நன்றாக பலன் கிடைக்கும். ஸ்டாக் மார்க்கெட்டில் இருந்து திடீர் பண வரவு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் மிகவும் அவசியம். யோகா, மெடிடேஷன் உங்களை படு ஆக்டிவ் ஆக்கி விடும்.

கணேஷ ஸ்துதி சொல்லுங்கள். தான தார்மத்தில் மனதை செலுத்துங்கள். சனி வார உபவாசம் மேற்கொள்ளுங்கள். நன்மை தரும்.

மீனம்


பெரியோர்களின் போதனை, அட்வைஸ் எடுத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தினரிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருங்கள். உங்கள்ளுக்கு நல்லது. வீடு மனை வாங்குவீர்கள் அல்லது விற்பீர்கள். கெட்ட சகவாசம், கெட்ட பழக்க வழக்கங்களிடம் இருந்து தள்ளி இருங்கள். முன் பின் அறியாதவர்களிடம் ஜாக்கிரதையாக பழகுங்கள். காதல் ஜோடிகளுக்கு பிரமாதமான நேரம். ஆன்மீகம், தத்துவம் போன்ற விஷயங்கள் உங்களை கவரும். கொடுக்கல் வாங்கலில் உஷாராக இருங்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். சிலர் வாழ்க்கையில் மங்களகரமான கார்யங்கள் நடக்கும். ஆரோகியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

சர்வ கார்ய சித்தி யந்திரம் வீட்டில் வைத்து பூஜை செயுங்கள். எல்லா விஷயத்திலும் மேலும் மேலும் நன்மை உண்டாகும்.

Related Articles:

No comments:

Post a Comment