மே 2017 ராசி-பலன்

உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த மே 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும்மேஷ ராசிக்காரர்களே, உங்கள் பலன்களை பற்றி அறியலாமா? 

கார்ய க்ஷேத்திரத்தில் மாற்றங்கள் வரலாம். நீங்கள் செய்யும் உழைப்புக்கு ஈடாக நன்மைகள் வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளிடம் மரியாதையாக பழகவும். அவர்கள் ஆதரவு கட்டாயம் உங்களுக்கு தான். கார்ய சம்பந்தமாக பிரயாணம் செய்ய நேரிடலாம். பதவி உயர்வு, மரியாதை, சன்மானம் ஆகியவைகள் வரும். குடும்பத்தில் நிம்மதி ஓங்கும். தார்மீக யாத்திரை மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்க படலாம். குழந்தைகள் விஷயத்தில் நிதானம் கவனம் தேவை. விவாதம் வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள். மனோ விஞானம், ஆன்மிகம் போன்றவற்றில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் முன்னேறுவார்கள். வெளிநாட்டில் இருப்போருக்கு நல்ல நேரம். சகோதரர் மற்றும் நண்பர்கள் மூலமாக லாபம் பெறுவீர்கள். தன வரவு உள்ள மாதம் இது.

நெற்றியில் மஞ்சள் கலந்த சிகப்பு திலகம் எட்டு கொள்ளுங்கள்.

ரிஷப ராசிக்காரர்களே, நீங்கள் இந்த மாதம் என்ன எதிர்பார்க்கலாம்?

செய்யும் தொழிலில் மாற்ற இருக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ வேண்டி வரும். தாய் உடல் ஆரோக்கியம் கெடலாம். சிலருக்கு வீடு மாற்றமும் இருக்கிறது. உங்கள் மன நிம்மதி கெடும். தூர தேச பிரயாணம் பண்ண நேரிடும். குழந்தைகள் படிப்பில், உடல் நலத்தில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு அடிக்கடி கோவம் வரலாம். நிலைமையை ஜாக்கிரதையாக கையாளுங்கள். தாம்பத்திய உறவில் சந்தோசம் நிலவும். பண வரவு அதிகம் இருந்ததால் உற்சாகமாக இருப்பீர்கள். மாணவர்களில் சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வெளிநாட்டு பண வரவு இந்த மாதம் உள்ளது.

வெள்ளை நிற தித்திப்பு பண்டங்கள் உட்கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் கொடுங்கள்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எந்த விதமாக இருக்கும் என்று பார்க்கலாம் வாருங்கள்.

இந்த மாதம் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம். தாம்பத்திய உறவில் நிம்மதியின்மை இருக்கும். வியாபாரத்தில் நஷ்டம் காணலாம். பார்த்து பண முதலீடு செய்யுங்கள். தாயின் ஆரோக்கியம் கவலை கொடுக்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தார்மீக யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். வீட்டில் மங்கள கார்யங்கள் நடக்கும். செய்யும் தொழிலில் மேலும் மேலும் வ்ருத்தி காண்பீர்கள். உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேறுவர். வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு பிரமாதமான நேரம். கணவன்-மனைவி உறவில் நிதானம் தேவை. சகோதர சம்பந்தங்களுக்கு கஷ்டம் வரலாம்.

சிலருக்கு தொண்டை, வாய் போன்றவற்றில் பிரச்னைகள் வந்து விட்டு போகலாம். 

பூந்தொட்டிகளில் மற்றும் குளியலறையில் பச்சை நிற கற்கள் வையுங்கள். 

கடக ராசிக்காரர்களுக்கு மே மாதம் எப்படி?

இந்த மாதம் திடீர் தன லாபம் மற்றும் திடீர் நஷ்டம் உண்டாகும். ஏதாவது பெரிய இன்வெஸ்ட்மென்ட் செய்வதற்கு முன் பல முறை யோசியுங்கள். குடும்பத்தில் சந்தோசம் இருக்கும். தந்தைக்கு மிகவும் நல்ல நேரம். அவர் சப்போர்ட் உங்களுக்கு நிறைய கிடைக்கும். உங்கள் உடல் திடமாகவும், மனம் ஸ்திரமாகவும் இருக்கும். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். சிலருக்கு தூக்கமின்மை இருக்கலாம். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். தாயை பற்றி கவலையாக இருப்பீர்கள், ஆனால் தந்தையின் அந்தஸ்தில் கூடுதல் ஏற்படும். சிலர் விசாலமாகவும் அழகாகவும் வீடு வாங்குவார்கள். உங்கள் பராக்ரமத்தில் வ்ருத்தி காணலாம். 

ஏழை எளியோருக்கு, அதுவும் பெண்மணிகளுக்கு, பால் தானம் செய்தால் நல்லது. 

சிம்ம ராசிக்காரர்களுக்கு, என்ன மாதிரி பலன்கள் அமையும்?

இந்த மாதம் உங்களுக்கு வயறு சம்பந்த உபத்ரவங்கள் வரலாம். குழந்தைகளின் சுகத்திற்கு கெடுதல் வரலாம், ஆனால் வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் சுகமாக இருக்கும். சிலர் கடன் வாங்குவார்கள். ராகுவின் ஜென்ம சந்திரன் மேல் சஞ்சாரம் உங்கள் ஆரோகியத்திற்கு கெடுதல் விளைவிக்கலாம். ஷேர் பாஜாரில் நல்ல லாபம் காண்பீர்கள். தந்தையுடன் சிலருக்கு மனஸ்தாபம் ஏற்படலாம். சிலர் தந்தை நலம் பற்றி கவலை கொள்வார்கள். உங்கள் பரிவாரகத்தில் சந்தோஷமும் நிம்மதியும் நிலவும். கூடப்பிறந்தோரிடம் உறவு கெட வாய்ப்புள்ளது. சிலர் வேலை மாற்றம் செய்வார்கள். இட மாற்றம் வாய்ப்பு உள்ளது. தன லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஆன்மீகத்தில் ஆழமாக இறங்குவீர்கள். வெகு தூர தார்மீக பிரயாணம் மேற்கொள்வீர்கள். செய்யும் வேலையை உற்சாகத்துடன் செய்வீர்கள். எதிரிகள் மீது உங்கள் ஆதிக்கம் பலமாக இருக்கும். 

சிகப்பு நிற காலணி மற்றும் ஆடைகள் உபயோகியுங்கள்.

கன்யா ராசிகர்களுக்கு என்ன நடக்குமென்று தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

இந்த மாதம் நீங்கள் உற்சாகமாக காரியத்தில் இறங்குவீர்கள். பாக்கியம் உங்களுக்கு கை கொடுக்கும். அடிக்கடி ஆன்மீக விசாரம் செய்வீர்கள். ஸ்பஷ்டமாக யோசிப்பீர்கள். உச்ச அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆவீர்கள். குழந்தைகளின் படிப்பு சீராக இருக்கும். ஆனால் மன உளைச்சல் அதிகள் இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்த பிரச்னைகள் கிளம்பும். வீடு மாற்றம் இருக்கும். வீட்டில் சிற்சில பிரச்னைகள் உடனே கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லையானால், விஸ்வரூபம் எடுக்கும். வீடு சம்பந்த பிரச்னைகள் உங்களை திணற வைக்கும். தாய் உடல் நிலமை மோசமாகும், ஜாக்கிரதை. வியாபாரிகளுக்கு லாபமான சமயம். தாம்பத்திய உறவு மதுரமாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியம் கெட வாய்ப்புள்ளது. கூட பிறந்தோர் முன்னேறுவார்கள்.

மாட்டுக்கு பச்சை பயறு, பயத்தம்பருப்பு கொடுங்கள். 

துலா ராசிக்காரர்களே, உங்கள் இந்த மாத பலன் என்ன சொல்கிறதென்று பார்ப்போமா?

உங்கள் பராக்ரம் பளிச்சிடும். ரொம்பவும் உழைத்து செய்யும் வேலையில் பன்மடங்கு உயர்வீர்கள். பல வழியில் லாபம் சம்பாதிப்பீர்கள். வியாபாரிகள் சொல்லமுடியாத அளவுக்கு ஆதாயம் காண்பார்கள். நீங்களும், உங்கள் தாயும் ஆன்மீகத்தில் இறங்குவீர்கள். உடல் ஆரோகியதில் கவனம் காட்டுங்கள். உடலில் காயம், அடி ஏற்படலாம். உங்கள் விவாஹ வாழ்க்கையில் பிரச்னைகள் கிளம்பலாம். செலவுக்கு சரிசமமாக பண வரவும் இருக்கும். வாழ்க்கை துணையுடன் சண்டை சச்சரவு வராமல் தவிர்க்கவும். வெளிநாட்டில் இருந்து நல்ல சமாச்சாரம் கிடைக்கும்.

வாசனை திரவம் உபயோகிக்கவும். 

விருச்சிக ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு எப்படி என்று அறியலாமா?

வீடு மாற்றம், வீட்டிற்கு உள்ளே மாற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். தாய், தந்தை ஆரோகியத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். இன்வெஸ்ட்மென்ட் விஷயத்தை பார்த்து கையாளுங்கள். வேலையில் மாற்றங்கள் உங்களுக்கு கட்டாயம் இந்த மாதம் இருக்கிறது. உச்ச அதிகாரிகளிடம், சக ஊழியர்களிடம் மரியாதையாகவும், அன்பாகவும் பழகுங்கள். தாம்பத்திய விரைவில் குதூகலம் இருக்கும், ஆனால் வாழ்க்கை துணையின் சுகத்திற்கு கெடுதல் வரலாம். காதல் ஜோடிகளுக்கு ரொம்பவே நல்ல சமயம். கலை, மேனேஜ்மென்ட் போன்றவற்றில் உள்ள மாணவர்களுக்கு உகந்த சமயம். பாராட்டும் புகழும் பெறுவார்கள். ஆரோகியமாக இருப்பீர்கள்; எதிரிகள் ஓடி ஒளிவார்கள். நன்றாக உழைத்து உச்சிக்கு போவீர்கள்.

சிகப்பு நிற வஸ்திரம் ஏழை எளியோர்களுக்கு தானமாக கொடுங்கள்.

தனுசு ராசி அன்பர்களே, உங்களுக்கு எப்படி பட்ட பலன் இருக்கிறது என்று பார்ப்போமா?

வேலையில் மிக அதிகமாக உழைத்து முன்னேறுவீர்கள்; கூட பிறந்தோர், ஸ்நேகிதர்கள் சஹயோகம் கிட்டும். தந்தையின் ஆரோக்கியம் கெடும்; உங்கள் கவலைக்கு முக்ஹய்ய காரணமாகவும் இருக்கும். நீங்கள் தூரதேச பிரயாணம் செய்வீர்கள். உங்கள் பராக்கிரமம் எளிதாக புலப்படும். கார்ய க்ஷேத்திரத்தில் மிக அதிகமாக செயல் திறனை காண்பித்து வெகு தூரம் செல்வீர்கள். பதவி உயர்வு, பண உயர்வு, கௌரவம், புகழ் எல்லாம் உங்கள் வேலை செய்யும் இடத்தில் காத்துக்கொண்டிருக்கின்றன. உங்கள் தாய் பேரும் புகழும் பெற்று சந்தோஷமாக இருக்கும் நேரமிது. நீங்கள் புது வீடு, வாஹனம் வாங்குவீர்கள். குடும்பத்தோர் அமைதியாகவும், திருப்தியாகவும் இருப்பார்கள். தந்தைக்கு நற்பேர் கிட்டும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்; நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி அடைவார்கள்.

வாழை மரத்திற்கு பூஜை செய்யுங்கள். 

மகர ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம் எந்த விதமான ப்ரபாவத்தை கொண்டு வரும்?

வேலை சம்பந்த விஷயங்களில் பிசியாக இருப்பீர்கள். பார்ட்னெர்ஷிப்பில் செய்யும் எந்த வேலையும் ஒரு நல்ல திருப்பம் கொடுக்கும்; விட வேண்டாம். பணம் சம்பாதிக்கும் முயற்சியில் உடல் நலத்தை புறக்கணிக்காதீர்கள். புது வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. திடீர் பண வரவு அல்லது நஷ்டம் ஏற்படலாம். வரவும் செலவும் சரியாக இருக்கும். தந்தையின் ஆன்மீக வளச்சிக்கு உகந்த நேரம் இது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கு பங்கம் வரும். உங்களில் சிலர் சமூக சேவையில் இறங்குவீர்கள்; வேறு சிலர் தார்மீக யாத்திரை மேற்கொள்வீர்கள். உங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். தன லாபம் இருக்கும். வீடு மனை வாங்குவீர்கள்.

சனிக்கிழமை தோறும் பைரவருக்கு பூஜை செய்யுங்கள்.

கும்ப ராசிக்காரர்களுக்கு எந்த விதமான பலன் கிடைக்கும்?

செய்யும் தொழிலில் மும்முரமாக உழைக்கும் நேரம் இது. பன் மடங்கு லாபம் வரும். பாராட்டும் நல்ல பெயரும் கிட்டும். எளிதாக எல்லா வேலையும் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு நல்லது செய்யணும் என்ற எண்ணம் இந்த மதம் மேல் ஓங்கும். உடல் திடமாகவும், மனம் உல்லாசமாகவும் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் நிலவும். ஏதாவது புது வியாபாரம் ஆரம்பிக்கும் முன் நிறைய தடவை யோசியுங்கள். தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல்கள் வரலாம்; ஜாக்கிரதையாக கையாளவும். பண வரவில் குறைவிருக்காது. தாய் தந்தையின் உடல் நிலை நன்றாக இருக்கும்; அவர்கள் ஆதரவு நிச்சயம். தைர்யமாக காரியத்தில் இறங்கி அதி வேகமாக செய்து முடிப்பீர்கள். சிலர் வீடு வாங்குதல், புதுப்பித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள்.

பக்ஷிகளுக்கு, அதுவும் ஸ்பெஷலாக காக்கைகளுக்கு, உணவு கொடுங்கள். 

மீன ராசி நேயர்களே, வாருங்கள். உங்கள் இந்த மாத பலன் என்னவென்று பார்ப்போமா?

செய்யும் வேலையில் கடினமாக உழைப்பீர்கள். சிலருக்கு வேலை மற்றம் இருக்கலாம். வேறு சிலருக்கு விவாஹம் போன்ற மங்களகரமான சமாசாரம் நடக்கலாம். விவாக வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். கூட பிறந்தோர் சந்தோஷமாக வாழ்வார்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். உங்கள் ஆன்மீக மார்கத்தில் ஆர்வம் பன்மடங்கு அதிகரிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து கிடைக்கும் பாக்கியம் இருக்கிறது. குடும்பத்தில் நிம்மதி இருந்தாலும், சிற்சில சண்டைகள் வரத்தான் வரும். பார்த்து கையாளுங்கள். சிலருக்கு வேலையில் பண உயர்வு, பதவி உயர்வு கிட்டும். எல்லா கார்யமம் தைர்யமாக செய்து முடிப்பீர்கள். பாக்கியம் நிறைய விஷயத்தில் கைகொடுக்கும். தந்தை வாழ்க்கையில் நல்ல விஷயம் நடக்க விருக்கிறது. நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் தூர பிரயாணம் நன்மை செய்யும். 

உடலில் எந்த விதமாகவும் மஞ்சள் கயறு அல்லது தங்கம் சேர்த்து கொள்ளுங்கள்.
Read More »